ETV Bharat / state

Chennai Metro: கிரீன்வேஸ் சாலை - அடையாறு சந்திப்பு சுரங்கப்பாதை பணி தொடங்கியது - chennai news

சென்னை கிரீன்வேஸ் சாலை முதல் அடையாறு சந்திப்பு வரையிலான மெட்ரோ ரயில் பாதைக்கு சுரங்கம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

கிரீன்வேஸ் சாலை - அடையாறு சந்திப்பு சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கியது!

author img

By

Published : Feb 17, 2023, 10:02 AM IST

சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மெட்ரோ ரயில் சேவையை சென்னையில் தொடங்கியது. இந்த சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு, வழித்தடம் 1 மற்றும் 2இல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் IIஇல் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை, மாதவரம் பால்பண்ணை அருகில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டத்தின் வழித்தடம் 3இன் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளில், மாதவரம் பால்பண்ணை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ நிலையம் வரை 1.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு முதல் சுரங்கம் தோண்டும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று (பிப்.16) சென்னை கிரீன்வேஸ் சாலை நிலையம் அருகில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் II, வழித்தடம் 3இல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், கிரீன்வேஸ் சாலை நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரை 1.226 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

  • Tunneling commenced at Greenways Road Station in Corridor 3 contract TU-02 Kellys to Taramani) of Phase –II Chennai Metro Rail Project, Today (16/02/2023). pic.twitter.com/mwfa6O4Aqv

    — Chennai Metro Rail (@cmrlofficial) February 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் IIஇல் மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் வழித்தடம் 3இல் ஒப்பந்தம் TU02, 8 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கெல்லிஸ் முதல் தரமணி வரை பயன்படுத்தப்படுகிறது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் ஹெர்ரென்க்னெக்ட் நிறுவனம் தயாரித்தது.

திட்டங்களில் பயன்படுத்தப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்களுக்கு பெயரிடும் ஒரு வழக்கம் உள்ளது. அந்த வகையில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு காவேரி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள், முக்கியமாக டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திரு.வி.க. பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து அடையாறு சந்திப்பு நிலையத்தை ஆகஸ்ட் 2023க்குள் வந்தைடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரீன்வேஸ் சாலையில் இருந்து இயக்கப்படும் அடுத்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு அடையாறு என்று பெயரிடப்பட்டுள்ளது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி - ஓ.எம்.ஆர். சாலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.