ETV Bharat / state

வெப்பச்சலனம் காரணமாக மழை: விவரங்களை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மையம்! - வெப்பச்சலனம் காரணமாக மழை

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்யக்கூடிய மழை குறித்த விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக மழை
வெப்பச்சலனம் காரணமாக மழை
author img

By

Published : Jun 8, 2021, 5:05 PM IST

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெய்யக்கூடிய மழையின் விவரங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் ( ஜுன் 08, 09) தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் ஜுன் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

(YMCA) ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) 7 செ.மீ., அண்ணா பல்கலை (சென்னை), பூந்தமல்லீ (திருவள்ளூர்), சென்னை விமான நிலையம், கலவை (ராணிப்பேட்டை), சாய் ராம் கல்லூரி மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), அம்முந்தி (வேலூர்) ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ., திருவாலங்காடு (திருவள்ளூர்), சோளிங்கர் (ராணிப்பேட்டை), வேலூர் ஆகியவற்றில் தலா 3 செ.மீ., கோத்தகிரி (நீலகிரி), கொரட்டூர் (திருவள்ளூர்) பகுதிகளில் தலா 2 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், விருதுநகர், சதியார் (மதுரை) தலா பகுதிகளில் தலா 1 செ.மீ., என பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

இன்று (ஜுன்.08) முதல் ஜுன் 12ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இன்று (ஜுன்.08) முதல் ஜுன் 10ஆம் தேதி வரை தெற்கு வங்கக் கடல் பகுதிகளிலும், ஜுன் 9ஆம் தேதி வரை மத்திய வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்கையில் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.

மேலும், ஜுன் 10ஆம் தேதி மத்திய வங்கக் கடலில், ஜுன் 11,12 ஆகிய தேதிகளில் தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதி மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஜுன் 10ஆம் தேதி முதல் ஜுன் 12ஆம் தேதி வரை கேரளா, கர்நாடக மாநிலங்களின் கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

ஜுன் 8ஆம் தேதி முதல் ஜுன் 12ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்” என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கன மழை: குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.