சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி தலைமையில், ஏழு மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளைக்கு கோடைகால விடுமுறை ரத்துசெய்யப்படுகிறது. மே 2ஆம் தேதிமுதல் 31ஆம் தேதிவரை வழக்கம்போல் நீதிமன்றங்கள் செயல்படும்.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறையும் ரத்துசெய்யப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ்; தமிழ்நாட்டின் நிலை என்ன? – அமைச்சர் விளக்கம்