ETV Bharat / state

'பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐக்கு அரசு முழு ஒத்துழைப்பு' - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு , கொடநாடு கொலை உள்ளிட்ட வழக்குகளில், அரசு பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சிபிஐ விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
author img

By

Published : Nov 6, 2019, 7:27 PM IST

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பேரிடர் மீட்பு தொடர்பான கண்காட்சியைப் பார்வையிட்டார். மேலும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினர், பேரிடர் காலங்களில் விபத்தில் இருந்து காப்பாற்றுவது, பாதுகாத்துக்கொள்வது என செய்முறை விளக்கங்களையும் செய்து காட்டினர். இதனை பல்வேறு பள்ளி மாணவர்கள் கண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி, வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி காவல் ஆணையர் விஸ்வநாதன், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு பொறுப்பு ஆணையர் சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 'நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் குழாய் 8 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லை என்று, உயிரிழந்த சுஜித்தின் பெற்றோர் கூறுகின்றனர். அவர்களின் கவனக்குறைவால் அது மூடப்படாமல் விட்டதன் விளைவு, சுஜித் ஆழ்துளைக் குழாயில் மாட்டிக்கொண்டான். அந்த குழந்தை மாட்டிக்கொண்டதை உடனே அறிந்து, அத்தனை தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி அவனை மீட்க அரசு முயற்சித்தது. அதுமட்டுமின்றி முதலமைச்சரின் உறவினர் உயிரிழந்தபோதும் அந்த துயரத்திலும், முதலமைச்சர் குழந்தையை மீட்பதில் கவனம் செலுத்தினார். ஆழ்துளைக் குழாயை முன்பே மூடியிருந்தால் உலகமே இன்று எனக்காக கண்ணீர் வடித்திருக்காது என, சுஜித் சொல்வது போல் எங்கள் காதுகளில் கேட்கிறது. எனவே, மழைக்காலங்களில் அருவிகள், ஆறுகள், குளங்கள் போன்ற நீர் நிலைகள் அருகில், இளைஞர்கள் ’செஃல்பி’ எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் விழிப்புணர்வு இல்லாமல் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படக் கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த மழைக்காலத்தை பாதுகாப்பாக எதிர்கொள்ள தீயணைப்புத்துறை, மாநகராட்சி, பேரிடர் மீட்புக்குழுக்களுக்கு புதியதாக நவீனக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.

பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, 'ஆண்டுக்கு ஓரிரு புயல் வந்த நிலை மாறி, மாதத்திற்கு ஒரு புயல் வரும் அளவிற்கு பருவநிலை மாறியிருக்கிறது.இயற்கை இடர்பாடுகளில் இருந்து மீட்பதில் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக தமிழகம் இருக்கிறது.உலக வெப்பமயமாதலை தடுத்தால் மட்டுமே இயற்கை பேரிடர்களில் இருந்து காத்துக்கொள்ள முடியும்” என்று கூறினார்.

கூட்டம் முடிந்த பின்னர், செய்தியாளர்ளை சந்தித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், ’திருவள்ளுவர் தெய்வப்புலவர், அவரை சாதாரண மனிதர்களுடன் ஒப்பிட முடியாது. அதுமட்டுமின்றி, மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது. எனவே, அவர் உருவத்தை மனிதர் உருவத்தில் ஒப்பிட்டு வரைவதை யாராலும் ஏற்க முடியாது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு திருக்குறள் கற்றுக்கொடுத்தால் உலகத்தில் மரியாதை, பக்குவம், அன்பு உள்ளிட்டவை வளரும். திருவள்ளுவருக்கு சாதி, மதம் என எதுவும் கிடையாது. அவர் அனைவருக்கும் சமமானவர். அவர் சிலையை அவமதிப்பவர்கள் மனிதராகவே இருக்க மாட்டார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை விடுத்து, அவர் உருவாக்கிய திருக்குறளை படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்றார்.

மேலும், 'உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தேர்தல் ஆணையம் தான், தேதியை அறிவிக்க வேண்டும். மீன்வளத்துறை எடுத்த நடவடிக்கைகள் மூலம், நடுக்கடலில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் 7,788 பேர் புயலில் சிக்கி கொள்ளாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ’கஜா’, ’வர்தா’ உள்ளிட்ட புயல்களில் அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்தது. அது வருங்காலத்திலும் தொடரும் வகையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.வெங்காயங்களை பதுக்குவதாலேயே வெங்காய விலை உயர்வு போன்ற செயற்கை மாயை உண்டாகியிருப்பதாகவும், அதனை வெளிக்கொண்டுவந்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காத வண்ணம், குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் கணக்கெடுக்கப்பட்டு சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன' என்றார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை விழிப்புணர்வு முகாம்
பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கு, கொடநாடு கொலை வழக்கு ஆகியவற்றில் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், 'குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதில் அரசு எந்த பாரபட்சமும் காட்டவில்லை. தற்போது நீதிமன்றம்தான் இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது. பொள்ளாச்சி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. எனவே,அரசின் சார்பில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்’ என்றார்.

இதையும் படிங்க:

12 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த மகன் - மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்த இளைஞர்களின் நெகிழ்ச்சி சம்பவம்!

Intro:Body:பொள்ளாச்சி, கொடநாடு உள்ளிட்ட வழக்குகளில் அரசு பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நீதிமன்றம் குண்டர் சட்டதை ரத்து செய்துள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேரிடர் மீட்பு தொடர்பான கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள்,  பேரிடர் மேலாண்மை குழுவினர், பேரிடர் காலங்களில் ஏற்படக்கூடிய  விபத்தில் இருந்து காப்பாற்றுவது, பாதுகாத்து கொள்வது எனசெய்முறை விளக்கங்களை செய்து காட்டினர். இதனை பல்வேறு பள்ளி மாணவர்கள் கண்டு ரசித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி,வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் விஸ்வநாதன், தீயணைப்பு மற்றும் மீட்பு குழு பொறுப்பு ஆணையர் சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிலகழ்சியில் பேசிய வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,

நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்த்துளை குழாய் 8 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லை என்று சுர்ஜித்தின் பெற்றோர் கூறுகின்றனர். அவர்களின் கவனக்குறைவால் அதை மூடப்படாமல் விட்டதன் விளைவு சுர்ஜித் ஆழ்துளை குழாயில் மாட்டிக்கொண்டான். அந்த குழந்தை மாட்டிக்கொண்டதை உடனே அறிந்து அரசு இருக்கும் அத்தனை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவனை மீட்க முயற்சித்தது. அதுமட்டுமின்றி முதல்வரின் உறவினர் உயிரிழந்தபோதும் அந்த துயரத்திலும் முதல்வர் குழந்தையை மீட்பதில் கவனம் செலுத்தினார் எனக் கூறினார்.

ஆழ்த்துளை குழாயை மூடியிருந்தால் உலகமே இன்று எனக்காக கண்ணீர் வடித்திருக்காது என சுர்ஜித் சொல்வது போல் எங்கள் காதுகளில் கேட்கிறது என அமைச்சர் வேதனை தெரிவித்தார்.

எனவே மழை காலங்களில் நீர் வீழ்ச்சிகள், குட்டைகள், ஆறுகள் போன்ற நீர் நிலைகள் அருகில் இளைஞர்கள் செஃல்பி எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அமைச்சர் ஆர் பி. உதயகுமார்.

தமிழகத்தில் விழிப்புணர்வு இல்லாமல் எந்த உயிர் சேதம் ஏற்பட கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், பேரிடர் காலங்களில் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

அதேபோல் மீட்பு நடவடிக்கையில் ஜப்பானைவிட தமிழகம் சிறந்து செயல்படும் என்றும், பேரிடரால் தமிழகத்தில் இனி ஒரு உயிரை இழக்ககூடாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.

இந்நிலையில் இந்த மழை பாதுகாப்பாக எதிர்கொள்ள தீயணைப்பு துறை, மாநகராட்சி பேரிடர் மீட்புக்குழுக்களுக்கு புதியதாக நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார் அமைச்சர்.

*பின் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது,*

வருடத்திற்கு ஓரிரு புயல் வந்த நிலை மாறி மாதத்திற்கு ஒரு புயல் வரும் அளவிற்கு பருவ நிலை மாறியிருக்கிறது.

இந்நிலையில் இயற்கை இடர்பாடுகளில் இருந்து மீட்பதில் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக தமிழகம் இருக்கிறது.

உலக வெப்ப மயமாதலை தடுத்தால் மட்டுமே இயற்கை பேரிடர்களில் இருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும் என்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்ளை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,
திருவள்ளுவர் தெய்வ புலவர், அவரை சாதாரண மனிதர்களுடன் ஒப்பிட முடியாது. அதுமட்டுமின்றி மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது என்ற அவர், எனவே அவர் உருவத்தை மனிதர் உருவத்தில் ஒப்பிட்டு வரைவதை ஏற்க முடியாது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து பேசிய அவர், பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு திருக்குறள் குறித்து கற்று கொடுத்தால் உலகத்தில் மரியாதை, பக்குவம், அன்பு உள்ளிட்டவை வளரும் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார். திருவள்ளுவருக்கு ஜாதி, மதம், என எதுவும் கிடையாது அவர் அனைவருக்கும் சமமானவர். அவர் சிலையை அவமதிப்பவர்கள் மனிதராகவே இருக்க மாட்டார்கள் என்று கூறினார். இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என்று திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை விடுத்து, அவர் உருவாக்கிய திருக்குறளை படித்து அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், தேர்தல் ஆணையம் தான் தேதியை அறிவிக்க வேண்டும் எனக் கூறினார்.

மீன்வளத்துறை எடுத்த நடவடிக்கைகள் மூலம் நடுக்கடலில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மீன்பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்கள் 7788 பேர் கியார் புயலில் சிக்கி கொள்ளாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், கஜா, வர்தா உள்ளிட்ட புயல்களில் அரசு சிறப்பான நடவடிக்கையை எடுத்துள்ளது. அது வருங்காலத்திலும் தொடரும் வகையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வெங்காயங்களை பதுக்குவதாலேயே வெங்காய விலை உயர்வு போன்ற செயற்கை மாயை உண்டாகிருப்பதாகவும், அதனை வெளிக்கொண்டு வந்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர், மழை காலத்தில் தண்ணீர் தேங்காத வண்ணம், குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் கணக்கெடுக்கப்பட்டு சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு, கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது குறித்த கேள்விக்கு, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் அரசு எந்த பாரபட்சமும் காட்டவில்லை. தற்போது நீதிமன்றம் தான் இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து உள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. எனவே அரசின் சார்பில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.