ETV Bharat / state

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்த நபர் கைது! - சென்னை சைபர் கிரைம் போலீஸ்

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி சுமார் 11 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த நபரை, சென்னை மத்திய குற்ற பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

chennai cyber crime police arrests Gujarat man arrested for duping rs 11 lakhs in cryptocurrency scam
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி ரூ. 11 லட்சம் மோசடி செய்த நபர் கைது
author img

By

Published : Jun 19, 2023, 7:06 PM IST

சென்னை: திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பழங்கால திரைப்படத்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, இந்த நவநாகரீக உலகில், தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க, அதிகரிக்க, அதுதொடர்பான குற்றச் செயல்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. சென்னையின் புறநகர்ப் பகுதியான அயனாவரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், சென்னை காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகாரில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதற்காகத் தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டார். அவரை நம்பி அவர்கள் கொடுத்த இணையத்தளத்தில் பதிவு செய்து சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான தொகையை, மர்மநபர் கூறிய வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்ததாகவும், ஆனால் தான் செலுத்திய தொகை எதுவும் தனக்குத் திரும்ப வரவில்லை என்றும் புகாரில் தெரிவித்து உள்ளார்.

இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட, சென்னை மத்திய குற்ற பிரிவின் சைபர் க்ரைம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் அனுப்பிய வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் மர்மநபர் பேசிய செல்போன் எண் விவரங்கள் போன்றவை சேகரிக்கப்பட்டு போலீசார் ஆய்வு செய்தனர்.மேலும் அந்த நபரின் வங்கிக் கணக்குடன் தொடர்புடைய செல்போன் எண், அதன் அழைப்பு விவரங்கள், இமெயில் ஐடி, அதன் ஐபி விவரங்களும் சேகரிக்கப்பட்டு, இந்த வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

பின்னர் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட ஏடிஎம்கள், அதன் விவரங்கள், சிசிடிவி பதிவுகளும் பெறப்பட்டு விசாரணை செய்ததில், அந்த நபர் குஜராத்தில் இருப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் அந்த நபர் குஜராத் மாநிலம், சூரத் நகரில் இருந்து இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், தனிப்படை அமைத்து குஜராத் மாநிலம் சூரத்திற்குச் சென்று தனிவாலா மஹபூப் இப்ராஹிம்(வயது 30) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அந்த நபரை குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கிரிப்டோ கரன்சி தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு சைபர் கிரைம் காவல் நிலையங்கள் மற்றும் 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மல்டிலெவல் மார்க்கெட்டிங் வர்த்தக மோசடி போன்ற, கிரிப்டோ கரன்சி மோசடிகளிலும் சமீபகாலமாக அதிகரித்து வருவது, மக்களிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: TN Rain Update: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.