சென்னை: உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய் பிடிக்கும் மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்களுக்கான வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை இன்று (செப்.27) பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடக்கி வைத்தார்.
-
உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நாய் பிடிக்கும் பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்களை வெறிநாய்க்கடி நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்திடும் வகையில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை மாண்புமிகு மேயர் (1/3) pic.twitter.com/KuUeT1CFlg
— Greater Chennai Corporation (@chennaicorp) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நாய் பிடிக்கும் பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்களை வெறிநாய்க்கடி நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்திடும் வகையில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை மாண்புமிகு மேயர் (1/3) pic.twitter.com/KuUeT1CFlg
— Greater Chennai Corporation (@chennaicorp) September 27, 2023உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நாய் பிடிக்கும் பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்களை வெறிநாய்க்கடி நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்திடும் வகையில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை மாண்புமிகு மேயர் (1/3) pic.twitter.com/KuUeT1CFlg
— Greater Chennai Corporation (@chennaicorp) September 27, 2023
உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெறிநாய்க்கடி நோய் தாக்கத்தில் இருந்து பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய் பிடிக்கும் பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாத்திடும் வகையில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை தொடக்கி வைத்து, நாய் பிடிக்கும் பணியாளர்களுக்கு சீருடைகள், காலணிகள், கையுறைகள் மற்றும் நாய் பிடிக்கும் வலைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மேயர் பிரியா பேசியபோது, “ரேபிஸ் நோய் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நோய் பாதித்த நபர் மற்றும் அவரின் குடும்பத்தை எவ்வாறு பாதிக்கும் என்றும், தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்தும், நாய் கடித்தால் மட்டுமே ரேபிஸ் பரவும் என்றில்லாமல், என்னென்ன விலங்குகள் கடித்தால் ரேபிஸ் பரவும் என்றும் இன்று சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது.
நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தவுடன், அதற்கான தடுப்பூசி மற்றும் சிகிச்சையை உடனடியாக மேற்கொண்டால் மட்டுமே இந்த நோய்க்கான தீர்வினைக் காண முடியும். இது குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்திடும் வகையில், தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நாய் பிடிக்கும் பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், பணியில் ஈடுபடும்போது சிறு கீறல் ஏற்பட்டாலும், அதன் மூலம் ஏற்படும் நோய் தாக்கத்தினால் நீங்கள் பாதிக்கப்படுவதுடன் உங்களது குடும்பமும் பாதிக்கப்படும் என்பதால் கட்டாயமாக கையுறைகளை அணிந்து, அவரவருக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உபகரணங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நாய் பிடிக்கும் பணிகளில் ஈடுபடும் பொழுது வழங்கப்பட்டுள்ள சீருடைகளைக் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை திட்ட குளறுபடி எப்போது சரியாகும்? - அமைச்சர் கீதாஜீவன் பதில்