ETV Bharat / state

ராயபுரத்தில் ஒரே நாளில் 81 பேருக்கு கரோனா! - chennai corporation

சென்னை : ராயபுரம் மண்டலத்தில் ஒரே நாளில் 81 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : May 10, 2020, 12:05 PM IST

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக வைரஸ் தொற்றுப் பாதிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, சென்னையில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது. சென்னையில், நேற்று (மே.9) ஒரே நாளில் மட்டும் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 330 ஆக உயர்ந்தது. இதில், அதிகபட்சமாக ராயபுரம் பகுதியில், 571 பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலை மண்டல வாரியாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மேலும், 501 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து, தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் பார்க்க: ஆதரவற்ற குழந்தைகளின் தாய் திருநங்கை நூரி சலீம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.