ETV Bharat / state

’தற்காலிக மருத்துவர், செவிலியர் பணிகள்’ - சென்னை மாநகராட்சி அறிவிப்பு - COVID-19 Recruitment

சென்னை: கரோனா தடுப்பு பணிக்காக மருத்துவர்கள், செவிலியர்கள் தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
author img

By

Published : May 25, 2021, 5:44 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், சென்னையில் மட்டும் தினமும் கிட்டத்தட்ட ஆறாயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் இணைந்து பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மேலும் வார்டுக்கு இரண்டு அல்லது மூன்று என கிட்டதட்ட 400 மருத்துவ முகாம்கள் வரை நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, கரோனா தடுப்புப் பணிக்காக ஒராண்டுக்கு தற்காலிகமாக பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி,

மாத ஊதியம் 60 ஆயிரத்தில் 115 மருத்துவ அலுவலர்கள்,

மாத ஊதியம் 15 ஆயிரத்தில் 189 செவிலியர்கள் பணிக்கான அறிவிப்பாணையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

மேலும் 115 மருத்துவ அலுவலர்கள், 189 செவிலியர்கள் என மொத்தம் 304 காலி இடங்கள் உள்ளன. மருத்துவர்களுக்கு மாதம் 60,000 ரூபாய் ஊதியமும், செவிலியர்களுக்கு மாதம் 15,000 ரூபாய் ஊதியமும் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 27ஆம் தேதி இரவு 8 மணிக்குள் தங்களது சான்றிதழை, கீழ்காணும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

மருத்துவர்கள் : http://covid19.chennaicorporation.gov.in/covid/medicalofficer/

செவிலியர்கள்: http://covid19.chennaicorporation.gov.in/covid/nurse/

இதனை அடுத்து வரும் 27ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா அரங்கத்தில் நேர்காணல் நடைபெறும்.

இதையும் படிங்க: சென்னையில் 1,236 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.