சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட இடங்களில் இரவில் பெய்த மழை நீர் தேக்கம், மழை நீர் வடிகால் கட்டுமான பணிகள் உள்ளிட்டவைகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரில் ஆய்வு செய்தார்.
தி.நகரில் உள்ள மாம்பலம் கால்வாய் 106 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் கட்டுமான பணிகள் 20 சதவீதம் முடிந்துள்ளன.
அதனை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ககன்தீப் சிங் பேடி, “சென்னையில் இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னையில் உள்ள 15 மண்டலத்திலத்திற்கு தலா 1 என 15 ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலர்களுடன் இரவிலும் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயார்
இன்று (அக்.05) கோடம்பாக்கம், வளசரவாக்கம், 100 அடி சாலை, வேளச்சேரி, அடையாறு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த ஒன்டறை மாதத்தில் மட்டும் 30 ஆயிரம் மழை நீர் வடிகால்களில் மணல் அகற்றும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அந்த இடத்தை தற்போது ஆய்வு செய்த போது மழை நீர் வடிய தொடங்குகிறது. இன்னும் பல பணிகள் முடிவடைய உள்ளன.
மாம்பலம் கால்வாய் நிரந்தர கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மழை காலத்தில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் பணிகளும், மழை நீரும் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள 880 தண்ணீர் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
அதற்கு தேவையான மின்சார மற்றும் பயன்பாட்டில் இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜேசிபி உள்ளிட்ட கனகர வாகனங்கள் வார்டு வாரியாக வைக்கப்பட்டுள்ளன. அந்த வாகன ஓட்டுநர்கள் தொலைபேசி எண்ணுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் பேடி தெரிவித்தார்.
இதையும் படிங்க:ராகுல் காந்தி கரங்களுக்கு வலு சேர்ப்பாரா சித்த ராமையா!