வங்கக் கடலில் உருவான நிவர் புயல் கரையை கடந்ததன் எதிரொலியாக, சென்னை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் சென்னை மாநகராட்சி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
நிவர் புயல் காரணமாக சென்னை பட்டினப்பாக்கம் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால், கடற்கரை அருகேயுள்ள சாலையில் ஒரு அடி மேல் மணல், சாலையில் காணப்பட்டது. இதனால் பட்டினப்பாக்கம் பகுதிக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், இன்று (நவம்பர் 27) சென்னை மாநகராட்சி சார்பில் பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் இருக்கும் மணலை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:நீல நிறமாக மின்னிய கடற்கரை... காரணம் என்ன?