ETV Bharat / state

சென்னையில் 50 ஆயிரத்தை நெருங்கும் கரோனா - சென்னையில் வேகமாக பரவும் கரோனா

சென்னை: சென்னையில் கரோனா வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Chennai close to 50k mark of corona affected cases

author img

By

Published : Jun 27, 2020, 12:07 PM IST

கரோனா தீநுண்மி தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் வேகமாகப் பரவிவருகிறது. இந்தப் பரவலைத் தடுக்க சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் ஜூன் 30ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி, சுகாதாரத் துறையின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும் நோய் தாக்கம் குறையாமல் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

நேற்று மட்டும் சென்னையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆயிரத்து 956 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 13இல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்தைக் கடந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

ராயபுரம் - 7,211 நபர்கள்
தண்டையார்பேட்டை - 5,989 நபர்கள்
தேனாம்பேட்டை - 5,655 நபர்கள்
கோடம்பாக்கம் - 5,316 நபர்கள்
அண்ணா நகர் - 5,397 நபர்கள்
திருவிக நகர் - 4,132 நபர்கள்
அடையாறு - 3,057 நபர்கள்
வளசரவாக்கம் - 2,201 நபர்கள்
அம்பத்தூர் - 1,982 நபர்கள்
திருவொற்றியூர் - 1,912 நபர்கள்
மாதவரம் - 1,524 நபர்கள்
ஆலந்தூர் - 1,229 நபர்கள்
பெருங்குடி - 944 நபர்கள்
சோழிங்கநல்லூர் - 1,037 நபர்கள்
மணலி - 798 நபர்கள்

என மொத்தம் 15 மண்டலங்களில் இதுவரை 49 ஆயிரத்து 690 நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60.13 விழுக்காட்டினர் ஆண்கள். 39.87 விழுக்காட்டினர் பெண்கள். மேலும் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 730 ஆக அதிகரித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.