சென்னை: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா வருகிற 29.08.2023 செவ்வாய்க்கிழமை அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கி 08.09.2023 தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.
29.08.2023 அன்று மாலை 04.30 மணிக்குக் கொடி தேர்ப்பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு 6வது அவென்யூ, 3வது பிரதான சாலை, 7வது அவென்யு வழியாகச் சென்று திரும்பி மீண்டும் ஆலயத்துக்கும், 01.09.2023 அன்று மாலை 04.30 மணிக்கு இளைஞர் ஊர்வலம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு 6வது அவென்யு வழியாகச் சென்று திரும்பி மீண்டும் ஆலயத்துக்கும் வந்தடைகிறது.
அதே போல 02.09.2023 அன்று மாலை 07.30 மணிக்கு தேர்ப்பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு 6வது அவென்யு வழியாகச் சென்று திரும்பி மீண்டும் ஆலயத்துக்கும், 03.09.2023 அன்று மாலை 07.30 மணிக்கு நற்கருணை ஊர்வலம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு 6வது அவென்யு வழியாகச் சென்று திரும்பி மீண்டும் ஆலயத்துக்கும் வந்தடைகிறது.
இதனைத் தொடர்ந்து 07.09.2023 அன்று மாலை 07.30 மணிக்குப் பிரம்மாண்ட தேர்ப்பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு 6வது அவென்யு, 4வது பிரதான சாலை, 2வது அவென்யு, 3வது அவென்யு, 7வது அவென்யு வழியாகச் சென்று திரும்பி மீண்டும் ஆலயம் வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையால் அடையாறு பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
திரு.வி.க. பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லும். மக்கள் கூட்டம் அதிகமாகவும் வாகனங்கள் செல்ல முடியாதவாறு நெருக்கடியாகவும் இருக்கும் போது 3வது அவென்யு மற்றும் 2வது அவென்யு நோக்கி உள்வரும் அனைத்து வாகனங்களும் டாக்டர் முத்துலட்சுமி பூங்கா (எம்எல் பார்க்) வழியாகத் திரும்பி- LB சாலை- எம்ஜி சாலை வழியாக அனுப்பப்படும்.
அதே போல எம்ஜி சாலையில் அதிகமாக வாகனங்கள் செல்ல முடியாதவாறு நெருக்கடியாக இருக்கும் போது பெசன்ட் நகர் 1வது பிரதான சாலை- சாஸ்திரி நகர் பேருந்து நிலையம் - 2வது அவென்யு வழியாகத் திருப்பி விடப்படும்.
திருவிழாவைக் காண வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, பெசன்ட் நகர் 2வது பிரதான சாலை, பெசன்ட் நகர் 4வது அவென்யு, பெசன்ட் நகர் 17வது குறுக்குத் தெரு ஆகிய ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்துமாறு போக்குவரத்து காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Metro rail: நெல்லையில் மெட்ரோ ரயில் கனவு கானல் நீரானது- சேலம் மற்றும் திருச்சியில் மெட்ரோ ரயிலுக்கு வாய்ப்பு!