ETV Bharat / state

இன்னும் 3 மாதத்தில் சென்னை - பெங்களூரு பசுமை சாலைப் பணி: நிதின் கட்கரி - India is the only country in the world where you can easily get a driver's license

சென்னை: சாலைப் பாதுகாப்பில் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாடு மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

nitin kadkari
nitin kadkari
author img

By

Published : Feb 17, 2021, 6:51 AM IST

உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள சாலைப் பாதுகாப்புத் திட்டங்கள், மருத்துவமனைகளை மத்திய சாலைப் போக்குவரத்து, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொடங்கிவைத்தார்.

இதில், முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், முக்கிய அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சாலைப் பாதுகாப்பு ரோந்து வாகனங்கள், சிசிடிவிகள், மது சோதனை கருவிகள் உள்ளிட்டவற்றை நிதின் கட்கரி தொடங்கிவைத்தார்.

பின்னர் விழா மேடையில் பேசிய நிதின் கட்கரி, "சாலைப் பாதுகாப்பில் தமிழ்நாடு மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் கூறிவருகிறேன். இதனை அனைத்து முதலமைச்சர்களிடம் கூறிவருகிறேன். தமிழ்நாட்டிடமிருந்து மற்ற மாநிலங்கள் கற்க வேண்டும். தமிழ்நாடு போக்குவரத்து அலுவலர்கள், காவலர்களுக்கு நன்றி. அடுத்த முறை சென்னை வரும்போது சாலை விபத்தில்லா சென்னையாக இருக்க வேண்டும்.

சாலை விபத்து கரோனாவைவிட ஆபத்தானது. 2024ஆம் ஆண்டுக்குள் 50 விழுக்காடு மக்களை விபத்துகளிலிருந்து காக்க வேண்டும். உலகிலேயே எளிமையாக ஓட்டுநர் உரிமம் பெறக்கூடிய நாடு இந்தியா. இந்த நிலை மாற வேண்டும்.

நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கு ஏற்றாற்போல் சாலைகள் அகலப்படுத்தப்படவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சாலைகளை விரிவுப்படுத்த வேண்டும்.

நாட்டில் நல்ல பொதுப் போக்குவரத்து முறையை உருவாக்க, மின்சார வாகனங்களை அதிகரிக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து முறை இல்லாமல் சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது. சென்னை -பெங்களூரு பசுமை சாலைக்கான பணிகளை அடுத்த மூன்று மாதங்களில் தொடங்கவுள்ளோம். சாலைகள் மூலம் தமிழ்நாடு வளர்ச்சி பெறும்" என்றார்.

இதையும் படிங்க: சிறு, குறு, நடுத்தர நிறுவன முதலீட்டு மானியம் 3 மடங்கு உயர்வு! - முதலமைச்சர் அறிவிப்பு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.