ETV Bharat / state

சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜியால் வெடித்த சர்ச்சை! - senthil balaji

சென்னை: செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது திமுகவையும் கருணாநிதியையும் விமர்சித்து பேசிய கருத்துக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டி பேசியதால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

செந்தில் பாலாஜி
author img

By

Published : Jul 16, 2019, 10:27 PM IST

சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கை விவாத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் பொன்ராஜ் திமுக ஆட்சிகாலத்தில் டீசல் மானியம் வழங்காதது குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய திமுக சட்டப்பேரவௌ உறுப்பினர் செங்குட்டுவன், அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறையில் உள்ள கடனை சுட்டிக்காட்டி பேசினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறையில் கடன் என்பது இரண்டு ஆட்சி காலத்திலும் இருந்ததாக குறிப்பிட்டார்.

மேலும், தற்போது திமுகவில் உள்ள செந்தில் பாலாஜி, அதிமுகவில் இருந்த போது, தமிழ்நாட்டை பிச்சைப் பாத்திரமாக மாற்றியவர் கருணாநிதி, அட்சயப் பாத்திரமாக மாற்றியவர் ஜெயலலிதா என சட்டப்பேரவையில் குறிப்பிட்டு பேசியதை சுட்டிக்காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

கடும் அமளிக்கு மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்தபோது திமுகவை விமர்சித்த செந்தில் பாலாஜிதான் தற்போது திமுகவிற்கு சென்றிருக்கிறார். அதனால் திமுகவினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகதான், செந்தில்பாலாஜி பேசியதை சுட்டிக்காட்டியுள்ளனர் என விளக்கம் அளித்தார்.

Intro:Body:செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்தபோது திமுகவையும் கருணாநிதியையும் விமர்சித்து பேசிய கருத்துக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டி பேசியதால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் போக்குவரத்துதுறை மானிய கோரிக்கை விவாத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் பொன்ராஜ் திமுக ஆட்சிகாலத்தில் டீசல் மானியம் வழங்காதது குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கூட்டுவன், அதிமுக ஆட்சிகாலத்தில் போக்குவரத்து துறையில் உள்ள கடனை சுட்டிக்காட்டி பேசினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறையில் கடன் என்பது இரண்டு ஆட்சி காலத்திலும் இருந்ததாக குறிப்பிட்டார். மேலும் தற்போது திமுகவில் உள்ள செந்தில்பாலாஜி, அதிமுகவில் இருக்கும் போது பேரவையில் பேசும் போது, தமிழ்நாட்டை பிச்சைப்பாத்திரமாக மாற்றியவர் கருணாநிதி, அட்சயப்பாத்திரமாக மாற்றியவர் ஜெயலலிதா என குறிப்பிட்டு பேசியதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், பாத பூஜை செய்து திமுகவில் பதவி பெற்ற செந்தில்பாலாஜி உதிர்த்த முத்துகளையே அமைச்சர் விஜயபாஸ்கர் இங்கு பதிவு செய்ததாக கூறினார். அமைச்சர்களின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கு மத்தியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் இருந்தபோது திமுகவை விமர்சித்த செந்தில்பாலாஜிதான் தற்போது திமுகவிற்கு வந்திருக்கிறார் அதனால் திமுகவினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தான் பேரவையில் செந்தில்பாலாஜி பேசியதை சுட்டிக்காட்டியுள்ளனர் என விளக்கம் அளித்தார். அப்போது குறுக்கிடு பேசிய திமுக கொறடா சக்கரபாணி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவையில் இடம்பெற்ற கருத்துக்களை திமுகவினர் பேச பேரவை தலைவர் அனுமதிப்பாரா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சபாநாயகர் தனபால் மறைந்த தலைவர்கள் குறித்து பேரவையில் பேச கூடாது என்று தான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும், ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய கருத்துக்கள் அவைக்குறிப்பில் உள்ள கருத்துக்கள் என்பதால் நீக்க முடியாது எனவும் விளக்கம் அளித்தார். இதையடுத்து அதிமுக- திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். செந்தில்பாலாஜி பேசிய கருத்து குறித்து பேரவையில் கடும் அமளி நடைபெற்ற நேரத்தில் பேரவையில் செந்தில்பாலாஜி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.