ETV Bharat / state

மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்..! - மழை

Chennai Airport closed for Cyclone Michaung: மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால், விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Chennai Airport closed for Cyclone Michaung
சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 11:26 AM IST

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்து இருந்தது. இன்று புயல் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில் தொடர்ந்து கன மழையானது பெய்து வருகிறது. இந்த மிக்ஜாம் புயல் நாளை டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். புயல் எச்சரிக்கை காரணமாகச் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்குப் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அடையாறு ஆற்றில் பெருமளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்தின் பின்பகுதிகள் வழியாக, விமான நிலைய ஓடு பாதையில் வெள்ள நீரானது சூழ்ந்துள்ளது. அதனால் விமானத்தை இயக்க முடியாமல் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் அனைத்து விமானங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, வேறு விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்படுகின்றன. அதோடு காற்றின் வேகம் அதிகரித்து வருவதால், இந்த நேரத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி, விமானங்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 12.30 மணி நேரம் வரை அனைத்து விதமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வானிலை சீரான பின்பு மீண்டும், விமான சேவை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை விமான நிலைய சிறப்புக் குழுவினர், இந்திய வானிலை ஆய்வு குழுவினரின், யோசனைகளைப் பெற்று அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கத் தேவையான அனைத்து உபகரணங்களும் தயாராக உள்ளது; ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.