ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி: பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் காவலர்கள்! - சென்னை விநாயகர் சதுர்த்தி

சென்னை:விநாயகர் சதுர்த்தி நாளான இன்று எந்தவித அசாம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க சென்னை முழுவதும் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

Chathurthi protection
Chathurthi protection
author img

By

Published : Aug 22, 2020, 6:12 AM IST

விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று (ஆக. 22) கொண்டாடப்பட்டுவரும் நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, பொதுமக்கள் வீட்டில் மட்டுமே விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி இல்லை, மேலும் வீட்டில் வைத்த சிலையை தனிநபர் கொண்டுசென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்புகளிடம் கூடுதல் ஆணையர்கள் தலைமையில் மூன்று நாள்களாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசு விதித்த கட்டுப்பாடுகள் முழுவதும் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டு அதனை கடைப்பிடிப்பதாக அமைப்பினர் உறுதியளித்திருந்தனர்.

எனினும் ஒரு சில இந்து அமைப்புகள் தடையை மீறி ஊர்வலம் நடத்த உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் அரசு உத்தரவை மீறி விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் நடத்தக்கூடிய பிரச்னைக்குரிய இடங்களைக் கண்காணித்து பட்டியல் தயார் செய்யுமாறு காவல் அலுவலர்கள் நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையிடம் தெரிவித்திருந்தனர்.

அதனடிப்படையில் சென்னை முழுவதும் பிரச்னைக்குரிய பகுதிகளாக சுமார் 70 இடங்களைக் காவல் துறையினர் கண்டறிந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் வழக்கமாக விநாயகர் சிலையைக் கரைக்கும் இடங்களான எண்ணூர் கடற்கரை, திருவொற்றியூர் கடற்கரை, காசிமேடு துறைமுகம், நீலாங்கரை கடற்கரை, பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் கடற்கரை உள்ளிட்ட ஐந்து இடங்களில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

தனி நபர் தவிர அமைப்பு ரீதியாக, அதிக கூட்டம் சேர்த்து சிலைகளைக் கரைக்க முயற்சி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விநாயகர் சதுர்த்தி நாளான இன்று எந்தவித அசாம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க சென்னை முழுவதும் 15 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக அரசு உத்தரவை மீறி பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு செய்தால் காவல் துறை உதவியுடன் அரசு அலுவலர்கள் சிலையை அகற்றும் பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அமைப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.