ETV Bharat / state

சென்னை மாநகராட்சியில் பணி புரிய வாய்ப்பு - சென்னை மாநகராட்சியில் பணி

சென்னை: ஓராண்டு காலம் தற்காலிகமாக பணிபுரிய ஆய்வக நுட்புனர்கள், ஊடுகதிர் தொழிற்நுட்புனர்கள் பணிகளுக்கு நாளை, நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் பணி புரிய வாய்ப்பு
chennai corporation job alert
author img

By

Published : May 5, 2021, 3:39 PM IST

கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. சென்னையில் 6 ஆயிரம் பேருக்கு மேல் தினமும் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி, சுகாதாரத் துறை இணைந்து முகக்கவசம் வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

மருத்துவ முகாமைப் பொறுத்தவரையில் வார்டுக்கு 2 அல்லது 3 என கிட்டத்தட்ட 400 மருத்துவ முகாம்கள் நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மேலும் 14 கரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டுவருகின்றன. அங்கு மற்றும் மாநகராட்சி மருத்துவமனையில் ஓர் ஆண்டு தற்காலிகமாகப் பணிபுரிய ஆய்வக நுட்புனர்கள் மற்றும் ஊடுகதிர் தொழிற்நுட்புனர்கள் பணிகளுக்கு நாளை, நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மொத்தமாக 150 இடங்கள் காலியாக உள்ளன. 100 ஆய்வக நுட்புனர்கள் பணி மற்றும் 50 ஊடுகதிர் தொழிற்நுட்புனர்கள் பணி, ஆய்வக நுட்புனர்களுக்கு மாதம் ரூபாய் 15000, ஊடுகதிர் தொழிற்நுட்புனர்களுக்கு மாதம் ரூபாய் 20000 என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று அரசு பொய் கூறுகிறது' - ப.சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.