ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வரும் 2021ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வீட்டுப் பட்டியல், வீடுகள் கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவை இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
இதில் களப்பணியில், தகவல்களை சேகரிக்க முதன்முறையாக கைபேசி செயலியை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணியை கண்காணிக்கவும் வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இந்த புதிய செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியில் துறை சார்ந்த அலுவலர்களுக்கு (முதன்மை பயிற்சியாளர்கள்), தேசிய பயிற்சியாளர்கள் மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் பயிற்சி அளித்துவருகிறது.
இதற்கான பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கி வருகின்ற 23ஆம் தேதி வரையும், டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையும் இரண்டு கட்டங்களாக நடக்கவுள்ளது. இதில் பயிற்சிபெறும் முதன்மை பயிற்சியாளர்கள் கள பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர்.