ETV Bharat / state

மேட்ரிமோனி நிறுவனம் தொடங்குவதாக கூறி பண மோசடி! - மேட்ரிமோனி நிறுவனம்

சென்னை : மேட்ரிமோனி நிறுவனம் தொடங்குவதாக கூறி ரூ. 2.66 லட்சம் மதிப்பிலான கணினிகளை வாங்கி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதான பாலகுமார்
கைதான பாலகுமார்
author img

By

Published : Aug 23, 2020, 12:18 AM IST

சென்னை நீலாங்கரை கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் சேதுலிங்கம்(29). இவர் சொந்தமாக கம்ப்யூட்டர் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நீலாங்கரை மரைக்காயர் தெருவை சேர்ந்த பாலகுமார்(49) என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு சேதுலிங்கத்தின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, மேட்ரிமோனி நிறுவனம் ஒன்றை தொடங்க போவதாகவும், அதற்கு கணினிகள் தேவைப்படுவதாக கூறி ரூபாய் 2 லட்சத்து 66 ஆயிரத்திற்கு பல கணினிகளை வாங்கியுள்ளார்.

மேலும் பாலகுமார் 2.66 லட்சத்திற்கான காசோலையை சேதுலிங்கத்திடம் வழங்கியுள்ளார். காசோலையை பெற்று கொண்ட சேதுலிங்கம் பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் வங்கியில் பணம் இல்லை என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்ததைடுத்து, பாலகுமாரை சந்தித்து இதுகுறித்து தெரிவித்ததோடு, பணம் தருமாறும் கேட்டுள்ளார். ஆனால் பாலகுமார் பணத்தை தந்து விடுவதாக கூறி நீண்ட மாதங்களாக அலைகழித்து வந்துள்ளார்.

இதனையடுத்து பாலகுமாரின் வீட்டிற்கு சென்ற சேதுலிங்கம், பணத்தை பற்றி கேட்டதற்கு, பணத்தை கொடுக்கமுடியாது என்று அவர் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சேதுலிங்கம் இது குறித்து நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பாலகுமாரின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுபோல, சென்னை வேளச்சேரியை சேர்ந்த மகேஷ்வரி (40) என்பவர் பிரபல ஐடி நிறுவனத்தில் இயக்குநராக பணிபுரிவதாக கூறி, சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் உணவகம் நடத்துவதற்கு உரிமை வாங்கி தருவதாக கூறி ஆவடியை சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் ரூ. 13 லஞ்சம் பெற்றுள்ளார்.

பின்னர் நீண்ட நாட்களாக உரிமம் வாங்கி தராததால் சந்தேகமடைந்த விஜயகுமார், மகேஷ்வரி மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கிண்டி காவல்துறையினர் மகேஷ்வரியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கைதான மகேஷ்வரி ஐடி நிறுவனத்தில் பணிபுரியவில்லை என்பது தெரியவந்தது.

ஏற்கனவே மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் பிரபல ஐடி நிறுவனம் ஒன்று, தனது நிறுவனத்தின் பெயரை வைத்து மோசடி செய்து வருவதாக அளித்த புகாரின் பேரில் கடந்த 2018ஆம் ஆண்டு மகேஷ்வரி கைதாகி சிறைக்கு சென்று வெளியே வந்தது தெரியவந்தது. மேலும் இது போல வேறு நபர்கள் யாராவது ஏமாந்துள்ளனரா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: புட்செல் போலீஸ் எனக் கூறி பணம் திருட்டு - 3 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.