ETV Bharat / state

ஆளுநர் மாளிகை எதிரில் போராட்டம்? - தோழர் தியாகு அறிவிப்பு

author img

By

Published : Dec 26, 2019, 7:52 PM IST

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டிசம்பர் 31ஆம் தேதி ஆளுநர் மாளிகை எதிரில் போராட்டம் நடத்தவுள்ளதாகத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க மூத்தத் தலைவர் தோழர் தியாகு தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை எதிரில் போராட்டம் நடத்த திட்டம்
ஆளுநர் மாளிகை எதிரில் போராட்டம் நடத்த திட்டம்

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அந்த இயக்கத்திற்கு ஆதரவாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்க மூத்தத் தலைவர் தோழர் தியாகு, "சமீபத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான அறப்போராட்டத்தை வளர்த்துச் செல்லும் வகையில் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 2020 ஜனவரி முதல் நாள் தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகை எதிரில் உள்ள சாலையில் மக்கள் ஒன்றுகூடுமாறு அழைப்புவிடுக்கிறேன்" என்றார்.

ஆளுநர் மாளிகை எதிரில் போராட்டம் நடத்த திட்டம்

மேலும், போராட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் கைவிட வேண்டும், போராடும் மக்கள் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும், காஷ்மீரை ஆக்கிரமித்துள்ள இந்திய படைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்களுடன் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மோடி ஆட்சியில் 600 இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது' - அமித் ஷா

Intro:குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக
ஆளுநர் மாளிகை எதிரில் போராட்டம்

Body:சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் டிசம்பர் 31-ம் தேதி இரவு ஆளுநர் மாளிகை எதிரில் உள்ள சாலையில் சாலைகளை நிறைப்போம் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய தியாகு, சமீபத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதச் சார்புள்ள அரசியலமைப்புச் சட்டமாக மாற்றுகின்ற இந்த நடவடிக்கை மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுகிறது.

தேசியக் குடிமக்கள் பதிவேடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முரண்பட்ட கருத்துக்களை தேடுவதற்கு மக்கள் போராட்டத்தில் அழுத்தம்தான் காரணம்.

குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆடியோ டு கைவிடப்படும் முறை அவற்றிற்கு எதிரான அறப் போராட்டம் தொடரும். உத்திரப்பிரதேசத்தில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பதற்கு அந்த மாநிலத்தில் யோகி தலைமையிலான பாஜக அரசும் காவல் துறையும் பொறுப்பாகும்.
மக்களுக்கு எதிராக அரசு ஏவி விட்டுள்ள வன்முறை மறைக்கவே பிரதமர் அமைதி வழி பற்றி பேசுகிறார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான அறப் போராட்டத்தை வளர்த்துச் செல்லும் வகையில் வரும் 2020 புத்தாண்டு இரவில் சாலைகளை நிறைப்போம் என்ற முழக்கத்தோடு ஒன்று கூடுவோம்.

சென்னையில் 2019 டிசம்பர் 31 முடிந்து 2020 ஜனவரி முதல் நாள் தொடங்கும் நள்ளிரவு 12 மணி முதல் கிண்டி ஆளுநர் மாளிகை எதிரில் உள்ள சாலையில் மக்கள் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

அப்பொழுது குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் கைவிட வேண்டும்.
இவர் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்குக, சிறுபான்மை மக்களின் குடியுரிமையைப் பறிக்காதீர், போராடும் மக்கள் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும். காஷ்மீரை ஆக்கிரமித்துள்ள இந்திய படைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் கோரிக்கைகள் முழகங்களுடனும், கலை நிகழ்ச்சி மற்றும் இசையுடன் நடைபெறும்.

சென்னை ஐஐடியில் இருந்து ஜெர்மனி மாணவரை வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது. பிற நாட்டிலிருந்து இந்தியாவிற்கு மாணவர்கள் வந்தாலும் அவர்களுக்கும் இங்குள்ள போராட்டங்களில் பங்கு பெறும் உரிமை உள்ளது என தெரிவித்தனர்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.