தமிழ்நாடு அனைத்து வள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னை பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அலுவலகத்தின் முன்னர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வட்டார வளமைய பயிற்றுனர் பாக்கிய ஜெயந்தி, "வட்டார வளமைய பயிற்றுநர்களை கடந்த ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். தென் மாவட்டங்களில் இருந்து வட மாவட்டங்களில் பணி புரிந்துவரும் தங்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
இதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தை இழந்து குழந்தைகளையும் பார்க்க முடியாமல் சிரமப்படுகிறோம். எனவே ஒரு வாரத்தில் தங்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணி இடமாறுதல் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர்கள், “பள்ளி கல்வித்துறையில் பல்வேறு பணிகளை தங்கள் மீது திணிக்க வேண்டாம்” எனவும் கோரிக்கை விடுத்தனர்.