திமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில் திமுக பொதுக்குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏக்கள், எம்.பி., மாவட்டச் செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் என மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் 21 முக்கியத் தீர்மானங்களும், திமுகவின் சட்ட விதிகளை மாற்றி அமைத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பேசிய மு.க. ஸ்டாலின், 'திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என மாநில அரசு மட்டுமல்ல, மத்திய அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வெற்றி சாதாரணமாகக் கிடைக்காது. கிடைக்கவும் விட மாட்டார்கள். நம்மிடம் ஒற்றுமை இல்லாமல், என்ன உழைத்தாலும் வெற்றி கிடைக்காது' எனத் தெரிவித்தார்.
மேலும், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்பதால், அந்த அலுவலகத்தை மூடுவோம் என பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறியதற்கு பதிலளித்த ஸ்டாலின், 'முரசொலியை பூட்டுப் போட விடுவோமா?' என சவால் விடுத்தார்.
இதையும் படிங்க...நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் அரவணப்பை நாடும் அதிருப்திகள்!