ETV Bharat / state

ரஜினியை தூக்கிப் பிடிக்கும் பாஜக... தூக்கி அடிக்கும் அதிமுக... - அதிமுக ரஜினி

அதிமுக - ரஜினி இடையே எழுந்துள்ள இந்தக் கருத்து மோதல் துக்ளக் குருமூர்த்தியை உரசுவதாகவும், அதிமுக அவரையே எதிர்க்க துணிந்துவிட்டதாகவும் கருதும் அரசியல் நோக்கர்கள், அதிமுக - பாஜக - ரஜினி கூட்டணி அமையாது எனவும் தெரிவிக்கின்றனர்.

ரஜினியை தூக்கிப் பிடிக்கும் பாஜக... தூக்கி அடிக்கும் அதிமுக...

author img

By

Published : Jan 22, 2020, 10:50 PM IST

ரஜினிகாந்த் ... தமிழகத்தில் தவிர்க்க முடியாத பெயர். சினிமாவில் உச்சம் தொட்ட அளவுக்கு சர்ச்சைகளும் இவரை சூழ்ந்துள்ளன. துக்ளக் விழாவில் பெரியாரை பற்றி ரஜினி பேசிய கருத்துதான் இன்றைய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ராமர், சீதா படங்களை பெரியார் நிர்வாணமாக கொண்டு சென்றார் என்று துக்ளக்கில் வெளிவந்துள்ளது என்று துக்ளக் பொன்விழா மேடையில் ரஜினி பேசினார். இதற்கான ஆதாரம் என்று 'அவுட்லுக்' பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியை அவர் காண்பித்தார்.

மேலும், பத்திரிகையில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும், அதுகுறித்து தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை எனவும் ரஜினி தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பும், ஆதரவு கருத்தும் நிலவி வருகிறது. ரஜினிக்கு ஆதரவாக வரிந்துகட்டிக்கொண்டு எச். ராஜா, சு. சுவாமி, எஸ்.வி. சேகர் ஆகியோர் ட்வீட் செய்தனர். ரஜினியின் கருத்துக்கு பெரியார் உணர்வாளர்கள், திமுக மட்டுமல்லாது அதிமுகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசுகையில், உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு பெரியார் பகுத்தறிவு பகலவனாகக் திகழ்ந்தார். என்னை போன்ற சாதாரண மனிதர்கள் கூட மிக உயர்ந்த உன்னத நிலைக்கு வருவதற்கு அடித்தளமிட்டவர் பெரியார்தான். அவரைப் பற்றி குறை கூறுபவர்கள், அவர் இந்த சமுதாயத்தை உயர்த்த எடுத்த முயற்சிகளை படித்து ஆராய்ந்து பின் கருத்துகளை சொல்ல வேண்டும் என்றார்.

இதே கருத்தை வலியுறுத்தும் வகையில், அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், நடைபெறாத விஷயத்தை கூறி என்ன ஆதாயத்திற்காக இதனை ரஜினிகாந்த் செய்தார்? நடைபெறாததை முன்னிறுத்தி யாரும் மலிவான அரசியல் செய்யக்கூடாது. அவர் வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லது என்று தெரிவித்தார்.

அவரது தர்பார் படத்தை போல தமிழ்நாட்டிலும் தர்பார் நடத்தி வருகிறார். ஆனால் மக்கள் தீர்ப்புதான் இறுதியானது. எத்தனை ரஜினிகள் வந்தாலும் பெரியாரின் புகழை மறைக்க முடியாது என அமைச்சர் உதயகுமார் குட்டு வைத்துள்ளார். இப்படியாக அதிமுகவில் இருந்து ரஜினியை விளாச தொடங்கிவிட்டனர். பெரியார் சிலை உடைப்பு, பெரியார் சிலை அவமதிப்பு என்று பல சம்பவங்கள் நடந்தபோது வீரியமாக வாய்திறக்காத அதிமுக தற்போது ரஜினியை எதிர்க்க ஆளாளுக்கு வாய்ஸ் கொடுத்து வருகின்றனர்.

ரஜினியின் சர்ச்சை கருத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் அனைவரும் பாஜக அண்ட் கோ. ரஜினியின் கருத்துகள் அனைத்தும் பாஜகவின் கொள்கைக்கு ஒத்துப்போகும் நிலையில், தற்போது பெரியார் எதிர்ப்பு கொள்கையில் தீவிரமாக இருக்கும் தமிழக பாஜகவுக்கு ரஜினியின் கருத்து வலுசேர்த்து விட்டது. ரஜினியின் செயல் பாஜகவுக்கு பக்கபலமாக இருந்தாலும், அது அதிமுகவுக்கு எரிச்சலூட்டியுள்ளது. ஏனெனில், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் அதிமுகவின் படுதோல்விக்கு அதிமுக - பாஜக கூட்டணிதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக மீது மக்களுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேண்டா வெறுப்பாகத்தான் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது. இந்நிலையில்தான் ரஜினி விவகாரம் மூலம் அதிமுக பாஜகவை நேரடியாக எதிர்க்க தொடங்கியுள்ளது. இருப்பினும் கருத்து மோதல்கள்தானே தவிர கூட்டணி முறியவில்லை என்ற வகையில் இரு தரப்பும் வெளிக்காட்டிக் கொண்டு வருகிறது.

அதே வேளையில், குருமூர்த்தி அதிமுகவை இயக்கி வருகிறார் என்றும், அவரது ஆலோசனைப்படிதான் அதிமுக இயங்கி வருவதாகவும் பேச்சுகள் அடிபட்டன. குருமூர்த்தி நடத்திய விழாவில் ரஜினி பேசிய கருத்துக்கு குருமூர்த்தியும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிமுக - ரஜினி இடையே எழுந்துள்ள இந்தக் கருத்து மோதல் துக்ளக் குருமூர்த்தியை உரசுவதாகவும், அதிமுக அவரையே எதிர்க்க துணிந்துவிட்டதாகவும் கருதும் அரசியல் நோக்கர்கள், அதிமுக - பாஜக - ரஜினி கூட்டணி அமையாது எனவும் தெரிவிக்கின்றனர்.

Intro:Body:சென்னை // வி.டி. விஜய் // சிறப்பு செய்தி

தூக்கி பிடிக்கும் பாஜக

தூக்கி அடிக்கும் அதிமுக

ரஜினிகாந்த் ..... தமிழகத்தில் தவிர்க்க முடியாத பெயர். சினிமாவில் உச்சம் தொட்ட அளவுக்கு சர்ச்சைகளும் இவரை சூழ்ந்துள்ளன. துக்ளக் விழாவில் பெரியாரை பற்றி ரஜினி பேசிய கருத்து தான் இன்றைய சர்ச்சையாக உருவெடுத்து உள்ளது. ராமர், சீதா படங்களை பெரியார் நிர்வாணமாக கொண்டு சென்றார் என்று துக்ளக்கில் வெளிவந்துள்ளது என்று துக்ளக் பொன்விழா மேடையில் ரஜினி பேசியுள்ளார். இதற்கான ஆதாரம் என்று 'அவுட்லுக்' பத்திரிக்கையில் வெளிவந்துள்ள செய்தியை ரஜினி காண்பித்தார். மேலும், பத்திரிக்கையில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும் அதுகுறித்து தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை எனவரும் ரஜினி தெரிவித்து உள்ளார். இதற்கு எதிர்ப்பும், ஆதரவு கருத்தும் நிலவி வருகிறது. ரஜினிக்கு ஆதரவாக வரிந்து கட்டி கொண்டு எச். ராஜா, சு. சுவாமி, எஸ்.வி. சேகர் ஆகியோர் டுவீட்டிட்டு உள்ளனர். ரஜினியின் கருத்துக்கு பெரியார் உணர்வாளர்கள், திமுக மட்டுமல்லாது தற்போது அதிமுகவும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசுகையில், உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு பெரியார் பகுத்தறிவு பகலவனாகக் திகழ்ந்தார். என்னை போன்ற சாதாரண மனிதர்கள் கூட மிக உயர்ந்த உன்னத நிலைக்கு வருவதற்கு அடித்தளமிட்டவர் பெரியார்தான். அவரை பற்றி குறை கூறுபவர்கள், அவர் இந்த சமுதாயத்தை உயர்த்த எடுத்த முயற்சிகளை படித்து ஆராய்ந்து பின் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றார்.

இதே கருத்தை வலியுறுத்தும் வகையில், அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், நடைபெறாத விஷயத்தை ரஜினி எதற்காக திசை திருப்ப முயல்கிறார் ? என்ன ஆதாயத்திற்காக இதனை ரஜினிகாந்த் செய்தார்? நடைபெறாததை முன்னிறுத்தி யாரும் மலிவான அரசியல் செய்யக்கூடாது. அவர் வாய் மூடி மவுனமாக இருப்பது நல்லது என்று தெரிவித்தார்.

அவரது தர்பார் படத்தை போல தமிழ்நாட்டிலும் தர்பார் நடத்தி வருகிறார். ஆனால் மக்கள் தீர்ப்பு தான் இறுதியானது. எத்தனை ரஜினிகள் வந்தாலும் பெரியாரின் புகழை மறைக்க முடியாது என அமைச்சர் உதயகுமார் என குட்டு வைத்துள்ளார். இப்படியாக அதிமுகவில் இருந்து ரஜினியை விளாச தொடங்கி விட்டனர். பெரியார் சிலை உடைப்பு, பெரியார் சிலை அவமதிப்பு என்று பல சம்பவங்கள் நடந்தபோது வாய்திறக்காத அதிமுக தற்போது ரஜினியை எதிர்க்க ஆளாளுக்கு வாய்ஸ் கொடுத்து வருகின்றனர்.

ரஜினியின் சர்ச்சை கருத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் அனைவரும் பாஜக அண்ட் கோ. ரஜினியின் கருத்துக்கள் அனைத்தும் பாஜகவின் கொள்கைக்கு ஒத்து போகும் நிலையில் தற்போது பெரியார் எதிர்ப்பு கொள்கையில் தீவிரமாக இருக்கும் தமிழக பாஜகவுக்கு ரஜினியின் கருத்து வலுசேர்த்து விட்டது. ரஜினியின் செயல் பாஜகவுக்கு பக்கபலமாக இருந்தாலும், அது அதிமுகவுக்கு எரிச்சலூட்டி உள்ளது. ஏனெனில், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் அதிமுகவின் படுதோல்விக்கு அதிமுக - பாஜக கூட்டணிதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே அதிமுக மீது மக்களுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேண்டா வெறுப்பாகத்தான் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது. இந்நிலையில் தான் ரஜினி விவகாரம் மூலம் அதிமுக பாஜகவை நேரடியாக எதிர்க்க தொடங்கி உள்ளது. இருப்பினும் கருத்து மோதல்கள் தானே தவிர கூட்டணி முறியவில்லை என்ற வகையில் இரு தரப்பும் வெளிக்காட்டி கொண்டு வருகிறது.

அதே வேளையில், குருமூர்த்தி அதிமுகவை இயக்கி வருகிறார் என்றும், அவரது ஆலோசனைப்படிதான் அதிமுக இயங்கி வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. குருமூர்த்தி நடத்திய விழாவில் ரஜினி பேசிய கருத்துக்கு குருமூர்த்தியும் ஆதரவு தெரிவித்து உள்ளார். இந்நிலையில் அதிமுக - ரஜினி இடையே எழுந்துள்ள இந்த கருத்து மோதல் துக்ளக் குருமூர்த்தியை உரசுவதாகவும், அதிமுக அவரையே எதிர்க்க துணிந்து விட்டதாகவும் கருதும் அரசியல் நோக்கர்கள் அதிமுக - பாஜக - ரஜினி கூட்டணி அமையாது எனவும் தெரிவிக்கின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.