ETV Bharat / state

கரோனா சிகிச்சையின்போது காணமல்போன முதியவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவு - நீதிபதிகள் பிஎன் பிரகாஷ் என் ஆனந்த வெங்கடேஷ்

கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போன 73 வயது முதியவரின் குடும்பத்துக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharatகரோனா சிகிச்சையில் காணாமல் போன முதியவரின் குடும்பத்துக்கு இழப்பீடு - சென்னை உயர் நீதிமன்றம்

author img

By

Published : Dec 20, 2022, 9:48 AM IST

சென்னையில் 2020ஆம் ஆண்டு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிதாக கூறப்பட்டது. இதனால் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய அவரை கண்டுபிடித்து தர கோரி அவருடைய மகன் மணிவண்ணன், போலீசில் புகார் அளித்திருந்தார்.

அதோடு தந்தையை கண்டுபிடித்து தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்திருந்தார். ஆதிகேசவன் மாயமானது தொடர்பான வழக்கை பூக்கடை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் மணிவண்ணன் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் என். ஆனந்த வெங்கடேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஆதிகேசவனை தேடும் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று காவல் துறையினருக்கு அறிவுறுத்தியதுடன், ஆதிகேசவன் குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 கல்லூரி மாணவர்கள் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.