ETV Bharat / state

ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

author img

By

Published : Dec 26, 2021, 6:59 PM IST

ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி படிப்புகளில் சேரவிரும்பும் மாணவர்கள் நீட் தேர்வில் தகுதிப்பெற்றவர்கள் வருகிற 28ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Ayurveda Siddha Homeopathy courses
Ayurveda Siddha Homeopathy courses

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி (பி.ஏ.எம்.எஸ்/ பி.எஸ்.எம்.எஸ்/ பி.யு.எம்.எஸ்/ பி.எச்.எம்.எஸ்) இளநிலை மருத்துவப்படிப்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வருகிற டிசம்பர் 28ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜனவரி 18ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, 18ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

12ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான தேர்வில் (அறிவியல் பாடங்கள் மற்றும் ஆங்கிலம் எடுத்து) தேர்ச்சிப் பெற்று மற்றும் 2021 மருத்துவப் படிப்பிற்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை (NEET U.G-2021) எழுதி தேவையான தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை (முறையே அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு தனித்தனியாக) www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம், தகுதி, மேற்கண்டப் படிப்புகளுக்கான அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரிகளின் பட்டியலை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கலந்தாய்வின் போது நடைமுறையில் உள்ள இனசுழற்சி விதிமுறைகள் பின்பற்றப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 17 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் - கடலூர் கடற்கரை பகுதிகளில் அஞ்சலி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.