ETV Bharat / state

சென்னையில் வரும் 17ஆம் தேதி தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் - சென்னை

சென்னையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது

வரும் பதினேழாம் தேதி தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்

author img

By

Published : Aug 13, 2022, 9:28 PM IST

சென்னை: இதுதொடர்பாக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "சென்னையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும். சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

இதில் சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், வாய்ப்புகள், தொழிலை தேர்வு செய்து எப்படி, முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியவை பற்றி விவரிக்கப்பட இருக்கிறது. பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் EDII வழங்கி வருகிறது. இப்பயிற்சி மூலம் நிதி உதவி பெறும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம்.

எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: யூடியூப் பார்த்து கொள்ளையடித்த பட்டதாரி காதல் ஜோடி கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.