ஓய்வு பெறும் காவல்துறை அதிகாரிகளுக்கு, காவல்துறை சார்பில் வழியனுப்பு விழா நடைபெறுவது வழக்கம். ஓய்வு பெறக்கூடிய காவல்துறை அதிகாரிகளில், நீதிமன்றங்களுக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்க உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து வழியனுப்பும் நிகழ்ச்சி, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முன்னிலையில் நடத்தப்படுகிறது.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தலைமையில், ஓய்வு பெற உள்ள சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணனுக்கு பாராட்டி வழியனுப்பு விழா இன்று(நவ.26) நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை தாங்கிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வழக்குகள் விசாரணையின்போது குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு மிகச்சிறந்த முறையில் உதவிய கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
குற்றவியல் வழக்கறிஞர்கள் என்பவர்கள், காவல்துறை தரப்பு, குற்றவாளி தரப்பு என நீதிமன்றத்தின் முன்பு அனைவருக்கும் பொதுவானவர்கள். தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்தின் முன் நாங்கள் காப்பாற்ற மாட்டோம் என்றும், அதே வேளையில் நேர்மையான அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதுக்குறித்து டிஜிபி சைலேந்திரபாபு பேசுகையில், கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையை சிறப்பாக நடத்தியவர், குடியரசு தலைவர் விருது பெற்றவர் செந்தாமரைக்கண்ணன் என்றும், வீரப்பன் தேடுதல் வேட்டையில் மிகப்பெரிய அளவில் அவர் உதவியதாக பாராட்டி பேசினார்.
தொடர்ந்து கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் பேசுகையில், ’காவல்துறையினருக்கு நீதிமன்றங்களின் முக்கியத்துவம் தெரிவதில்லை என்றும், வழக்குப்பதிவு செய்தாலே பணி முடிந்தவிட்டதாக காவல்துறை கருதுவதாக தெரிவித்தார். கடந்த ஒன்றை ஆண்டுகளாக, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு, வழக்கு விசாரணைகளில் சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டதாக குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ரவுடிகளுக்கு ஆப்பு: "டிராக் கேடி" செயலி தமிழ்நாடு காவல்துறை அறிமுகம்...!