ETV Bharat / state

அரும்பாக்கம் நகைகள் திருட்டு விவகாரத்தில் வெளியான சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை - சென்னை குற்றச் செய்திகள்

அரும்பாக்கத்தில் தனியார் நகைக்கடன் வங்கியில் நகைகளைத் திருடியது அந்நிறுவனத்தின் ஊழியர் என்று கூறப்படும் நிலையில், அதற்கான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

சிசிடிவி காட்சி
Etv Bharat சிசிடிவி காட்சி
author img

By

Published : Aug 14, 2022, 4:33 PM IST

சென்னை: அரும்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் நகைக் கடன் வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகள் நேற்று (ஆக.13) திருடு போனது. இந்த விவகாரத்தில் அந்நிறுவனத்தின் ஊழியர் முருகன் என்பவர் திட்டமிட்டு நகைகளை திருடியது தெரியவந்துள்ளது.

நிறுவன ஊழியர் முருகன் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து நகைகளை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

மேலும், திருடப்பட்ட நகைகள் அனைத்தும் இன்ஸ்யூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கு முடிந்த பிறகு நகை மீட்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு அது திரும்ப கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சி

நகைகள் கிடைக்காத பட்சத்தில் இன்ஸ்யூரன்ஸ் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரும்பாக்கம் நகைக்கொள்ளையில் தீவிரமடையும் போலீஸாரின் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.