தமிழ்நாட்டில் பட்டம், பட்டயப்படிப்புகளில் படிக்கும் மாணவர்களில் இறுதியாண்டு தவிர பிற செமஸ்டர்களில் அரியர் வைத்துள்ளவ மாணவர்களில் தேர்வுக்காக பணம் கட்டிய அனைவரும் தேர்ச்சி அடையச் செய்யப்படுவர் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதற்கு ஒரு புறம் விமர்சனம் எழுந்தாலும், மறுபுறம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், அரியர் வைத்திருந்த பல மாணவர்களுக்கு தேர்சிக்கான மதிப்பெண் வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது முந்தைய பருவத்தேர்வுகளில் பெற்ற அகமதிப்பீடு மற்றும் தேர்வு மதிப்பெண்கள் தேர்ச்சி வழங்கக்கூடிய அளவில் இல்லாததால் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. மாணவர்களுக்கு முந்தைய செமஸ்டர் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி வழங்கவேண்டும் என்பதே பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் வழிகாட்டுதல் ஆகும்.
அந்தவகையில் அரியர் மாணவர்களு்ககான தேர்ச்சி வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், அரியர் மாணவர்களுக்கு எவ்வாறு விதிகளுக்குட்பட்டு தேர்ச்சி வழங்குவது என்கிற குழப்பம் பல்கலைக்கழங்களிடம் எழுந்துள்ளது.
மேலும், அரியர் மாணவர்களுக்கான மதிப்பெண்களை வழங்குவது குறித்து உயர்கல்வித் துறை வழிகாட்டுதல் எதையும் வெளியிடாமல் உள்ளதாலும் தொடர்ந்து குழப்பம் நிலவிவருகிறது.
இதையும் படிங்க: தேர்வு குறித்த முடிவு மாநிலங்களுக்கு கட்டுப்படாது என்பது தவறு - யுஜிசி