சென்னை: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை உள்ளது. அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துள்ளார். இதனையடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘கேளடி கண்மணி' என்ற தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்தபோது கதாநாயகனாக நடித்த அர்ணவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
அதன்பிறகு இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்து அர்ணாவின் கட்டாயத்தால் இந்துவாக இருந்த திவ்யா இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அப்போது திருமணமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என அர்ணவ் திவ்யாவை கட்டாயப்படுத்தி உள்ளார். இதனையடுத்து கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திவ்யா கர்ப்பமடைந்தபோது, இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் அர்ணவ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் ‘செல்லம்மா’ தொடரில் கதாநாயகியாக நடித்த அன்ஷிதா என்பவருடன் அர்ணவ் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனை அறிந்த திவ்யா, இது குறித்து அர்ணவிடம் கேட்டதற்கு தொடர்ந்து அர்ணவ் பிரச்னை செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த திவ்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அர்ணவ், உடனடியாக வீடியோவை டெலிட் செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். மேலும் அதே நேரத்தில் பதிவிட்ட குறிப்பிட்ட வீடியோ, விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என அர்ணவ் சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் திவ்யா அதிர்ச்சியடைந்தார்.
மேலும் படப்பிடிப்பிற்கு நேரடியாகச் சென்று பார்த்தபோது, இருவரும் தனியாக அறையில் நெருக்கமாக இருந்ததாகவும், இதை தட்டிக்கேட்டதற்கு தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசி, அனைவரின் முன்னிலையிலேயே குழந்தை வயிற்றிலேயே செத்துப்போக வேண்டும் என அர்ணவ் ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.
மேலும் அர்ணவ் தனியாக வீடு எடுத்து அர்ஷிதாவுடன் தங்கி வருவதாகவும், தனது முன்னிலையிலேயே செல்போனில் அவருக்கு ‘அர்ணவ் ஐ லவ் யூ’ என முத்தம் கொடுத்தும் வந்துள்ளார். இதனையடுத்து அன்ஷிதாவை திருமணம் செய்துகொள்ளப்போவதாக வந்த தகவல் குறித்து கேட்டபோது, அர்ணவ் கர்ப்பிணியாக உள்ள திவ்யாவின் வயிற்றில் எட்டி உதைத்து தாக்கியதில் ரத்தத்துடன் திவ்யா மயக்கம் அடைந்துள்ளார் என கூறப்படுகிறது.
பின்னர் நண்பர்கள் மூலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். கொஞ்சம் தாமதமாகி இருந்தால் குழந்தை இறக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என திவ்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திவ்யா புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திவ்யா, “அர்ணாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன். ஆனால் சேர்ந்து வாழ்வதற்கான அத்தனை வழிகளையும் அர்ணவ் அடைத்துவிட்டார். எனது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்திலுமே என்னை பிளாக் செய்து விட்டார்” என்றார்.
இதையும் படிங்க: கர்ப்பிணியான தன்னை கணவர் அடித்ததால் மருத்துவமனையில் அனுமதி; கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை