ETV Bharat / state

குரூப் 1 தேர்விற்கு ஜன.20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - குரூப் 1 தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வு காலிப் பணியிடங்களுக்கு வரும் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

TNPSC
TNPSC
author img

By

Published : Jan 1, 2020, 12:39 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) குரூப் 1 காலிப்பணியிடங்களுக்கான பட்டியலை வரும் 20ஆம் தேதி வெளியிடுகிறது. அப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குரூப் 1 தேர்வர்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி நடத்தப்படும். தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வு முறைகள் உள்ளிட்ட விவரங்கள் வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net, www.tnpsc.exam.in ஆகியவற்றில் வெளியிடப்படும். இதில் துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை, உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓராண்டிற்குள் குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டு தமிழ்நாடு தேர்வாணையம் சாதனை!

Intro:குருப் 1 தேர்விற்கு 20 ந் தேதி முதல் விண்ணப்பம்Body:குருப் 1 தேர்விற்கு 20 ந் தேதி முதல் விண்ணப்பம்
சென்னை,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு வரும் 20 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 1 பணியில் அடங்கிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வரும் 20 ந் தேதி வெளியிடுகிறது. தேர்வர்கள் ஜனவரி 20 ந் தேதி முதல் பிப்ரவரி 19 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதம் 5 ந் தேதி நடத்தப்படும்.

குருப் 1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீட்டு விபரங்கள், தேர்வு முறைகள் உள்ளிட்ட விபரங்கள் வரும் 20 ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net, www.tnpsc.exam.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளார்.

மேலும் துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த ஆண்டிற்கான அறிவிப்பில் இடம் பெறுகிறது. இந்த ஆண்டில் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் விபரம் முழுவதும் 20 ந் தேதி அறிவிக்கப்படும். இந்த ஆண்டிலேயே குருப் 1 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் ஒருவர் தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.