ETV Bharat / state

கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் - துப்பு துலக்கிய இன்ஸ்பெக்டருக்கு விருது

author img

By

Published : Aug 12, 2021, 7:47 PM IST

Updated : Aug 12, 2021, 10:13 PM IST

தமிழ்நாடு காவல் துறையைச் சோ்ந்த நான்கு பெண் காவல் ஆய்வாளா்கள் உள்பட எட்டு ஆய்வாளர்களுக்கு சிறந்த புலனாய்வுக்கான மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் - துப்பு துலக்கிய இன்ஸ்பெக்டருக்கு விருது
கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் - துப்பு துலக்கிய இன்ஸ்பெக்டருக்கு விருது

சென்னை: மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் காவல் துறையில் சிறப்பாக புலனாய்வு செய்யும் அலுவலர்களுக்கு, சுதந்திர தினத்தன்று பதக்கங்களை வழங்கி கெளரவித்து வருகிறது. காவல் துறை அலுவலர்களின் புலனாய்வுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தாண்டிற்கான விருது பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (ஆக.12) அறிவித்தது. நாடு முழுவதும் 152 காவல் அலுவலர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு காவல் ஆய்வாளர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

8 காவல் ஆய்வாளர்கள்

பெண் காவல் ஆய்வாளர்களான அன்பரசி, கவிதா, கலைச்செல்வி, கண்மணி மற்றும் சிதம்பர முருகேசன், மணிவண்ணன், ஜெயவேல், சரவணன் ஆகிய எட்டு பேர் சிறந்த புலனாய்வுக்கான விருதைப் பெறுகின்றனர்.

மணிவண்ணன் விசாரித்த வழக்குகள்

காவல் ஆய்வாளர் மணிவண்ணன், 2014ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளராக பணியாற்றியபோது, தனியார் லாட்ஜ் ஒன்றில் முகமது இக்பால் என்பவரை சுத்தியால் தாக்கி கொலை செய்யும் முயற்சி நடைபெற்றது. இந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் குற்றவாளிகளைக் கண்டறிவதில் சிக்கல் நீடித்தது.

அப்போது இந்த வழக்கை மணிவண்ணன் திறமையாக கையாண்டு தொழில்போட்டியின் காரணமாக கொலை முயற்சி நடந்ததைக் கண்டறிந்து அமித் ஆம்ஜா, கோபி நாத் என்பவர்களை கைது செய்து 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் பெற்றுத் தந்தார்.

அதேபோல் 1998ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை, கியூ பிரிவில் பணியாற்றியபோது தமிழ்த்தேசிய மீட்புப்படையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரை கைது செய்யவும், அவரிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றவும் உதவியாக இருந்துள்ளார். தமிழ்நாடு விடுதலைப் படைத் தலைவர் மாறனை கைது செய்தார். தற்போது மணிவண்ணன் மயிலாப்பூர் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றுகிறார்.

சிறப்பாக புலனாய்வு செய்த ஆய்வாளர்கள்

குரோம்பேட்டை காவல் ஆய்வாளராகப் பணியாற்றும் சிதம்பர முருகேசன், 2019ஆம் ஆண்டு வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவத்தை சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தந்தார்.

அதே போல் காவல் ஆய்வாளர் அன்பரசி போக்சோ வழக்கை சிறப்பாக துப்புத்துலக்கியதற்காகவும், கவிதா கொலை வழக்கை சிறப்பாக கையாண்டதற்காகவும் விருது பெற உள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு காவல் அலுவலர்கள் 8 பேருக்கு மத்திய அரசு விருது

Last Updated : Aug 12, 2021, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.