ETV Bharat / state

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட கட்டணக்குறைப்பு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுமா- அண்ணாமலை கேள்வி - தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட கட்டணக்குறைப்பு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுமா?

மத்திய தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட கட்டணக் குறைப்பு உத்தரவு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுமா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணாமலை கேள்வி
அண்ணாமலை கேள்வி
author img

By

Published : Feb 17, 2022, 10:20 AM IST

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கையின் போது, அரசின் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு, விதிக்கப்படும் கட்டண விகிதம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கட்டணங்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவசரமாக நடத்தப்பட்ட கலந்தாய்வு

இந்த உத்தரவின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் சேரும் ஏழை எளிய மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். இந்த உத்தரவுக்குப் பிறகு, தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக, முதல் கட்டக் கலந்தாய்வின் முடிவுகளை நான்கு நாள்கள் முன்னதாகவே வெளியிட்டு, மாணவர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உடனடியாகச் சேர உத்தரவிட்டுள்ளது.

தனியார் கல்லூரிக்கு துணை

மத்திய ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்ட இந்த கட்டணக் குறைப்பு உத்தரவை மதிக்காமல் தனியார் கல்லூரிகள் நான்கு முதல் பத்து லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். வேறு சில கல்லூரிகள் ஐந்து ஆண்டுகளுக்கான மொத்தக் கட்டணத்தையும் வசூலிக்கின்றனர். தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிக்க, தமிழ்நாடு அரசும் துணை போகிறது.

ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யும் இந்த தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் இருக்கிறது. அல்லது நீட் தேர்வுக்கு எதிரான நிலை எடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உதவுவது போல, இந்த உத்தரவையும் எதிர்த்து நீதிமன்றம் செல்லுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது தவிர எந்த மருத்துவக் கல்லூரியும், கேபிடேஷன் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் கட்டட நிதி, வளர்ச்சி நிதி என்று எந்த வசூல் நிதிகளும் இருக்கக்கூடாது என்றும் மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. தனியார் கல்லூரி நடத்துவதற்கான செலவுகள் கல்விக் கட்டணத்தில் சேர்க்கப்படலாம். இதுதவிர அதற்கு அதிகமான செலவுகள் அதிக லாபங்களைக் கல்விக் கட்டணத்தில் சேர்க்கக்கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

அரசு எந்த நிலைப்பாட்டை எடுக்கும்?

இதுவரை இட ஒதுக்கீட்டின் மூலம் தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு இடம் கிடைத்தாலும் கிராமப்புற ஏழை, எளிய, வசதியற்ற மாணவர்கள் இந்த கல்லூரிகளின் கட்டணம் அதிகம் இருப்பதால் அங்கே பணம் கட்டி சேர முடியாத நிலை ஏற்பட்டது.

இனி தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் கல்லூரி கட்டணமாக 13,610 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும் என்பதால் ஏழை எளிய வசதியற்ற மாணவர்கள் எளிதாக மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க முடியும்.

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள இந்த உத்தரவை, உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர். இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தினால், அது தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்கு லாபத்தைக் குறைக்கும் பின்னடைவாக இருக்கும். ஆனால் மாணவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். தமிழ்நாடு அரசு எந்த நிலைப்பாட்டை எடுக்கும்? மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு மத்திய ஆணையம் வெளியிட்ட உத்தரவின்படி மாணவர்கள் அரசு கட்டணத்தில் பயில்வதற்கு முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கோவையில் ஆர்மோனிய பெட்டி வாசித்து வாக்கு சேகரித்த வேட்பாளர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.