ETV Bharat / state

பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கம்... - மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன்

கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் பாஜகவில் இருந்து மதுரை மாவட்ட தலைவர் சரவணனை நீக்குவதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Etv BharatDr Saravanan Dismissed from BJP  Annamalai Dismissed Dr Saravanan  slipper issue  Annamalai Dismissed Dr Saravanan from BJP  பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கம்  டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து நீக்கம்  மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன்  டாக்டர் சரவணன்
பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கம்
author img

By

Published : Aug 14, 2022, 10:26 AM IST

சென்னை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வீரமரணமடைந்த இலட்சுமணனின் உடல் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று (ஆக. 13) வந்தது. அவரது உடலுக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். அப்போது, அமைச்சர் தரப்புக்கும், பாஜகவினருக்கும் இடையே மரியாதை செலுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

அஞ்சலி செலுத்திவிட்டு அமைச்சர் புறப்பட்டபோது, அவரின் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். பின்னர், சம்பவத்திற்கு தொடர்புடைய பாஜகவை சேர்ந்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக, அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (ஆக. 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை நகர மாவட்ட தலைவர், டாகடர் சரவணன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.

Dr Saravanan Dismissed from BJP  Annamalai Dismissed Dr Saravanan  slipper issue  Annamalai Dismissed Dr Saravanan from BJP  பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கம்  டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து நீக்கம்  மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன்  டாக்டர் சரவணன்
அண்ணாமலை அறிக்கை

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்த டாக்டர் சரவணன், பாஜகவினரின் செயலுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், இனி பாஜகவில் பயணிக்கப்போவதில்லை எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமைச்சருக்கு நடந்த சம்பவத்தால் எனக்கு தூக்கம் வரவில்லை... பாஜகவில் இருந்து விலகும் டாக்டர் சரவணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.