சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இதனை வரவேற்று பேசிய, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “1989ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிமுகம் செய்தார்.
மாஸ்டர் ஸ்டாலின்
அத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிக்கு இலவச பேருந்து பயணத்தில் சென்று பயன்பெற்ற மாணவன் என்ற அடிப்படையில் இந்த சட்ட மசோதாவினை நான் மனதார வரவேற்கிறேன்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பல சிறப்பான திட்டங்களைக் கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் “Master Of All Students” ஆக விளங்குகிறார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை, அதை மீட்டெடுக்கும் பணியில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.