சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக சார்பில், ஸ்டாலின் குறித்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தரப்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம், ’திமுக தரப்பில் கொளத்தூர் தொகுதியில் தேர்தல் ஆணையம் அனுமதி இன்றி விதிமுறைகளை மீறி ’ஸ்டாலின்தான் வராரு’ என்ற விளம்பரத்தில் அவரது புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளனர்.
இது குறித்து தொகுதி தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து கேட்டதற்கு நீதிமன்றத்தை நாட தேர்தல் அலுவலர்கள் கூறிவிட்டனர். அது மட்டுமில்லாமல் திமுகவினர் கொளத்தூர் தொகுதியில் ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுத்துள்ளனர்.
தேர்தலின்போது ஸ்டாலினின் மனைவி துர்கா சாலையை மறித்து சுய உதவிக் குழுவுடன் பரப்புரை செய்கிறார். அவர் எவ்வித அனுமதியும் பெறவில்லை. காவல் துறையும், தேர்தல் அலுவலர்களும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி, தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட திமுக வேட்பாளர் ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க:பெண்ணின் தங்க கம்மலை திருடினரா திமுகவினர்? - வெளியான வீடியோ!