சென்னை தண்டையார்பேட்டை ஐஓசி பகுதியில் நேற்றிரவு (நவ.10) ஆர்கே நகர் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவரை மடக்கிப் பிடித்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் பெயர் அப்பு என்ற பிரசாத் என்பதும் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கடந்த ஆறு வருடங்களாக தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
இவர், கொலை வழக்கு குறித்து உயர் நீதிமன்றத்தில் சரியாக ஆஜராகாமல் தலைமறைவாக சுற்றிக் கொண்டிருந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரை உடனடியாக கைதுசெய்த காவல் துறையினர், உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: செய்தியாளர் கொலை வழக்கு: 'எங்களைப் பற்றி செய்தி சேகரித்ததால் வெட்டிக் கொன்றோம்'