சென்னை: அஇஅதிமுக சட்டப்பேரவைக் கட்சித் துணைத் தலைவராக, அதிமுக சட்டப்பேரவை எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஓ.பன்னீர் செல்வம் நேற்று (ஜுன் 14) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை மதுரை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டாக சந்தித்து வாழ்த்தையும், தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.
அப்போது, ஆர்.பி. உதயகுமார், பெரியபுள்ளான், அய்யப்பன் ஆகிய மூன்று மதுரை மாவட்ட எம்.எல்.ஏக்களும், இவர்களுடன் முன்னாள் அமைச்சர் காமராஜும் சந்தித்து பூங்கொத்து கொடுத்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் தன் கட்டுக்குள் வைத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த சந்திப்பில் முக்கிய அங்கம்வகிக்கும் ஆர்.பி. உதயகுமார், ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத், தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற முக்கியப்பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டாஸ்மாக் திறப்பு: ராமதாஸுக்கு செந்தில் பாலாஜி பதிலடி!