தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் தலைவர்கள், தமிழறிஞர்களின் பெயருக்குப் பின்னால் இடம்பெற்றுள்ள அடையாளத்தைக் குறிக்கும் சாதிப் பெயர்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் நீக்கியுள்ளது. இதற்குப் பல தரப்பினரிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இது குறித்து பேசிய தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி, "2019ஆம் ஆண்டு திருத்தப்பட்ட பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டன. மூன்றாண்டுகள் கழித்துப் பாடப்புத்தகங்களில் தலைவர்களின் பெயரில் பின்னாலிருந்த சாதி நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில தலைவர்களுக்கு 'சாதி'தான் அடையாளம்!
பாடப்புத்தகங்களில் தலைவர்களின் பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன. மீண்டும் பாடப்புத்தகங்களில் தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் அவர்களின் அடையாளத்தைப் பிடிக்கும் சாதிப் பெயர்கள் இடம்பெறுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், கல்வியாளர்களுடன் கருத்துக் கேட்கப்பட்டு முதலமைச்சர் முடிவெடுப்பார்.
தலைவர்களின் பின்னால் இருக்கும் சாதிப் பெயர்கள் அவர்களின் அடையாளமாகத் திகழ்கின்றன. சில தலைவர்களை அவர்களுடைய பெயர்களைவிட அடையாளமாகத் திகழும் பெயர்களைக் கூறினால்தான் தெரிகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிகர் தனுஷ் சொகுசு கார் வழக்கு - நீதிபதி சரமாரி கேள்வி