சேலம் அரசு அருங்காட்சியகத்திற்குப் புதிய கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் சேலம் மாவட்ட அருங்காட்சியகத்தை மாற்றியமைக்கப் புதிய கட்டடம் கட்ட தொடராச் செலவினமாக ஐந்து கோடி ரூபாய் நிர்வாக அனுமதியளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள ஆணையில், "தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை சார்பாக தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத் அமைச்சர் க. பாண்டியராஜன் சட்டப் பேரவையில் ‘சேலம், கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட அரசு அருங்காட்சியகங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 50 சென்ட் அரசு நிலத்தில் புதிய கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, மாற்றியமைப்பதற்காகத் தொடராச் செலவினமாக 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும்விதமாக, முதற்கட்டமாக சேலம் அரசு அருங்காட்சியகத்திற்குப் புதிய கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் சேலம் மாவட்ட அருங்காட்சியகத்தை மாற்றியமைக்க, புதிய கட்டடம் கட்ட தொடராச் செலவினமாக ஐந்து கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதியளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இதையும் படிங்க: கடன் காகிதத்தில் ரஜினி பெயரை போத்ராவே எழுதிக் கொண்டார்- கஸ்தூரி ராஜா தரப்பில் பதில்!