ETV Bharat / state

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையில் கருணை அடிப்படையில் வேலை

author img

By

Published : Jan 21, 2022, 7:49 PM IST

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது.

கருணை அடிப்படையில் வேலை
கருணை அடிப்படையில் வேலை

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரிந்து பணியிடையே காலமான அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருந்து முதுநிலை மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது.

2019-2020 மற்றும் 2020-2021 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிட மதிப்பீட்டின் படி 14 இளநிலை உதவியாளர் மற்றும் 7 தட்டச்சர் பணியிடத்திற்கு தகுதியானவர்களுக்கு இன்று (ஜன.21) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரால் பணியிடம் வழங்கப்பட்டது.

அரசுப் பணியில் இருக்கும்போது தங்களின் குடும்பத்தை ஏழ்மையான சூழ்நிலைகளில் விட்டு இறந்த அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கு உதவுவதற்காக அரசாணை வெளியிடப்பட்டது.

தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறையின் மூலம் 2020 ஜனவரி 23 ஆம் தேதி முதல் அரசாணை வழிகாட்டு நெறிமுறைகளின்படி கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனித உரிமைக்கான போராட்டம்: சர்வதேச விருது பெற்ற எவிடென்ஸ் கதிர் - சிறப்பு நேர்காணல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.