இதுதொடர்பாக பேசியுள்ள ஏடிஜிபி ரவி, “நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த காசி (27) எஎன்பவர் சமூக வலைதளங்களில் போலியான பெயரில் ஐடிக்களை தொடங்கி, சுமார் 80 பெண்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பல லட்ச ரூபாய் பணத்தைப் பறித்துள்ளார். மேலும் அவர் தான் ஒரு உடற்பயிற்சி டிரெய்னர், யோகா டிரெய்னர் போன்ற பல்வேறு பொய்களைக் கூறி அவர் பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக மருத்துவர்கள், ஐடி ஊழியர்கள் என படித்த பெண்களே இவரிடம் ஏமாந்து பணத்தைப் பறிகொடுத்துள்ளனர்.
'பெண்கள் சமூக வலைதளங்களில் கவனமா இருங்க' - ஏடிஜிபி ரவி - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி பேட்டி
சென்னை: பெண்கள், குழந்தைகள் கவனத்துடன் சமூக வலைதளங்களைக் கையாள வேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி அறிவுறுத்தியுள்ளார்.