ETV Bharat / state

பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை.. துப்பு கிடைத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

சென்னை ஆதம்பாக்கத்தில் பழி தீர்ப்பதற்காக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆதம்பாக்கம் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

ரவுடிகள் மோதலில் ஆதம்பாக்கம் ஆய்வாளர் சஸ்பெண்ட்

author img

By

Published : May 20, 2023, 10:30 AM IST

சென்னை: சென்னையில் ரவுடிகள் மோதல் அவ்வப்போது நடந்து வருகிறது. இதில் பல்வேறு உயிரிழப்புகள், பொதுமக்களுக்கு காயம் மற்றும் பொருட்சேதம் ஆகியவையும் ஏற்படுகின்றன. எனவே, இவற்றை தவிர்க்க காவல் துறையினர் பல தரப்பட்ட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (42). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி பிரபல ரவுடி நாகூர் மீரான் என்பவரை வெட்டி கொலை செய்ததாக அறியப்படுபவர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் சீனிவாசன், பல நாட்களாக பதுங்கி இருந்ததாகவும், அவ்வப்போது நகருக்குள் வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அவரது உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வு அம்பேத்கர் நகரில் நடைபெற்றுள்ளது. இதற்காக சீனிவாசன் அம்பேத்கர் நகருக்கு வந்துள்ளார். அந்த நேரத்தில், கருப்பு நிற மாஸ்க் அணிந்து கொண்டு பட்டாக் கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் மர்ம கும்பல் ஒன்று அம்பேத்கர் நகரில் நடைபெற்ற துக்க நிகழ்வு அருகே வந்துள்ளது.

இதனையடுத்து அந்த கும்பல் பட்டாக் கத்தியால் சீனிவாசனை சரமாரியாக தாக்கி உள்ளது. பின்னர், அங்கிருந்த ஆட்கள் வருவதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளது. இதனையடுத்து படுகாயங்கள் உடன் கிடந்த சீனிவாசனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

ஆனால், சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே, இது தொடர்பாக தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை பிடிக்க மடிப்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வெட்டி கொலை செய்யப்பட்ட நாகூர் மீரானின் கொலைக்கு பழி தீர்க்கவே இந்த கொலையை நிகழ்த்தி உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.

இதனிடையே, சீனிவாசனின் கொலை வழக்கில் தொடர்புடைய 10 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். இதன்படி ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நொண்டி விக்கி என்ற தமிழரசன் (28), ஆலந்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற பிலால் (27), சிமிலி என்ற விஜயகுமார் (21), தினேஷ் என்ற பிரியாணி (22), பாலாஜி (21), ராகுல் (21), ஆனந்த கிருஷ்ணன் என்ற கறிக்கடை ஆனந்த் (19), பிரவீன் குமார் (19), மணிகண்டன் (19) மற்றும் பல்லு ஆனந்த் ஆகிய 10 பேரையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.

மேலும், இவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், கைதான 10 பேரும் வெட்டி கொலை செய்யப்பட்ட நாகூர் மீரானின் கொலைக்கு பழிவாங்கவே சீனிவாசனை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல், ரவுடி கும்பல் சீனிவாசனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தகவலின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்திற்காக, ஆதம்பாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் வீரமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இதையும் படிங்க: பாலியல் தொல்லை கொடுத்த கணவரை முன்னாள் காதலனுடன் தீர்த்துக் கட்டிய மனைவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.