ETV Bharat / state

திரை பிரபலங்கள் முன்னிலையில் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் நயன்தாரா! - surya

திரை பிரபலங்கள் முன்னிலையில் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.

திரை பிரபலங்கள் முன்னிலையில் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் நயன்தாரா!

author img

By

Published : Jun 9, 2022, 12:43 PM IST

Updated : Jun 9, 2022, 12:54 PM IST

சென்னை: மாமல்லபுரம் அருகே வடநெம்மேலி பகுதியில் அ 'ஷெரட்டன் கிராண்ட் ' எனும் கடற்கரை நட்சத்திர விடுதியில் நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் திரை பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பிற மொழி நடிகர்களும் வருகை தந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடியை வாழ்த்தினர்.

15க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் மந்திரங்கள் ஓத, நாதஸ்வரக் கலைஞர்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க, காலை சுமார் 10.25 மணிக்கு நயன்தாராவின் கழுத்தில் இந்து முறைப்படி விக்னேஷ் சிவன் தாலி கட்டினார்.

ரஜினிகாந்த் , ஷாருக்கான், சரத்குமார், ராதிகா சரத்குமார் , சூர்யா - ஜோதிகா, விஜய் சேதுபதி, கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, அட்லி, அனிருத், போனி கபூர், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி, இயக்குனர் சிறுத்தை சிவா, கௌதம் மேனன், ஹரி, அர்ச்சனா கல்பாதி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் வருகை தந்தனர்.

திரை பிரபலங்கள் முன்னிலையில் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் நயன்தாரா!

திருமணத்தின் புகைப்படங்களும் காணொளிகளும் வெளியில் கசிந்து விடக்கூடாது என்று கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு வருகை தந்த முன்னணி நடிகர்கள் கூட விஐபி(VIP), விவிஐபி என வகைப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர் .

விவிஐபி(VVIP) வரிசையில் வந்த நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சரத்குமார், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் மட்டுமே தங்களுடைய அலைபேசியை கையில் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர் . விஐபி பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர்களும், முன்னணி நடிகர்களின் குடும்பத்தினர்களும் அலைபேசியை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

நானும் ரவுடி தான் படத்தில் ஆரம்பித்த இவர்களது காதல் இன்று அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நயன் விக்கி ஜோடி திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 9th and Nayan 2.22 விக்னேஷ் சிவனின் கலக்கல் பதிவு

Last Updated : Jun 9, 2022, 12:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.