பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை. ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் கைதாகியிருக்கிறார். இது பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்குப் பாதையாக இருக்கவேண்டும். வேறெதற்காகவோ பயன்பட்டுவிடக் கூடாது" என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு 2019ஆம் ஆண்டிலிருந்து நடந்துவருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கில், நேற்று மாலை ஹேரேன் பால், பாபு, அருளானந்தம் என்ற மூன்று பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க:பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட மேலும் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்