ETV Bharat / state

சென்னையில் நிகழ்ந்த விபத்தில் 'அசுரன்' பட நடிகர் சரண்ராஜ் பலி! - மதுரவாயல் விபத்து செய்திகள்

சென்னை கே.கே.நகர் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் சினிமா துணை நடிகர் சரண்ராஜ் உயிரிழந்தார்.

accident
chennai
author img

By

Published : Jun 8, 2023, 2:01 PM IST

சென்னை: மதுரவாயல் தனலட்சுமி தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ்(26). இவர் வடசென்னை, அசுரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக பணியாற்றி உள்ளார். நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் சரண்ராஜ் தனது இருசக்கர வாகனத்தில் கே.கே நகர் ஆற்காடு சாலை அருகே சென்று கொண்டிருக்கும் போது பின்னால் அதிவேகமாக கட்டுப்பாட்டை இழந்து வந்த கார் ஒன்று சரண்ராஜ் பைக் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட நடிகர் சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அங்கிருந்த பொதுமக்கள் போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சரண்ராஜ் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: நீ மட்டும்தான் வீடியோ காட்டுவியா? - ஆபாச வீடியோவால் இளைஞரை கொலை.. தென்காசி எலும்புக்கூடு வழக்கில் பகீர் தகவல்!

பயங்கர விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை பிடித்த போலீசார் அவரிடம் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கண்ட விசாரணையில் அவர் சாலிகிராமம் எம்சி அவென்யூ பகுதியை சேர்ந்த பழனியப்பன் (41) என்பதும், இவர் சினிமாவில் துணை நடிகராக இருப்பதும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சரண்ராஜ் மற்றும் பழனியப்பன் ஆகியோர் இருவரும் நண்பர்கள் என்பதும் விசாரணையில் கூறப்படுகிறது. பழனியப்பன் குடிபழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் நேற்று அதிகளவு போதையில் இருந்துள்ளார் என்பதும், போலீசாரின் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதிவேகமாக காரை இயக்கிய பழனியப்பன் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து முன் சென்ற ஒரு கார் மற்றும் சரண்ராஜின் இருசக்கர வாகனம் மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த துணை நடிகர் சரண்ராஜிக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:செருப்பில் மறைத்து வைத்து ரூ.28 லட்சம் நகை கடத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.