ETV Bharat / state

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - கே.எஸ். அழகிரி

சென்னை: கரோனா வைரஸ் பாதிப்புக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

ks alagiri
ks alagiri
author img

By

Published : Apr 1, 2020, 7:18 PM IST

இது தொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனாவில் கரோனா வைரசால் உயிரிழப்புகளை பார்த்த பிறகு இந்திய அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுத்ததாக தெரியவில்லை.

ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்து உணவு கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியிலிருந்து சொந்த ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே செல்கிற நிலை ஏற்பட்டுள்ளது. பயணம் செய்ததன் விளைவாக, தொற்றுநோயை தங்கள் கிராமத்துக்கு கொண்டு சென்று பரப்புகிற மிக கொடூர நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆனால், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சாவகாசமாக எந்த சலனமும் இல்லாமல் தொலைக்காட்சியில் ராமாயணம் தொடரைப் பார்த்து களிப்படைகிறார்.

தமிழ்நாட்டை பொருத்தவரையில் ஜனநாயகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதனை முதலமைச்சர் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுக்கும் தமிழ்நாடு முதலமைச்சரை வன்மையாகக் கண்டிக்கிறேன். கரோனாவை எதிர்கொள்ள கேரள அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது.

நரேந்திர மோடி அரசு 15 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழ்நாடு அரசு 3 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளன. இத்தகைய குறைவான நிதி ஆதாரத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி மக்களையும் எடப்பாடி அரசால் காப்பாற்ற முடியுமா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

இவற்றுக்கு உரிய தீர்வை காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி சென்று திரும்பியவருக்கு கரோனா உறுதி: 6 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.