சென்னை: சினிமாவில் உள்ள முக்கிய பிரிவுகளுக்கான பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய பட்டப்படிப்புகள், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நடப்புக் கல்வியாண்டில் (2022 - 2023) நான்காண்டு கால பட்டப்படிப்பிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்புகள்:
- இளங்கலை- காட்சிக்கலை ( ஒளிப்பதிவு ) - Bachelor of Visual Arts (Cinematography)
- இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) - Bachelor of Visual Arts (Digital Intermediate)
- இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) - Bachelor of Visual Arts (Audiography)
- இளங்கலை - காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) - Bachelor of Visual Arts (Direction and Screenplay Writing)
- இளங்கலை - காட்சிக்கலை (படத்தொகுப்பு) - Bachelor of Visual Arts (Film Editing)
- இளங்கலை - காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) - (Animation and Visual Effects)
கல்வித்தகுதி: இதில், இளங்கலை - காட்சிக்கலை (ஒளிப்பதிவு) மற்றும் இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) ஆகிய பட்டப்படிப்புகளுக்கு மேல்நிலை (10+2) கல்வித்தேர்ச்சி (இயற்பியல் மற்றும் வேதியியல்) சிறப்புப் பாடமாக புகைப்படம் சார்ந்த தொழில் படிப்புகள் அல்லது அதற்கு இணையான படிப்புகள் அல்லது மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE) அல்லது மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் (ECE) ஆகிய பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
இளங்கலை - காட்சிக்கலை (படத்தொகுப்பு) படிப்பிற்கு மேல்நிலை (10+2) கல்வித்தேர்ச்சி (இயற்பியல் மற்றும் வேதியியல்) அல்லது சிறப்புப் பாடமாக வானொலி அல்லது தொலைக்காட்சி அல்லது உள்நாட்டு மின்னணு உபகரணங்கள் சார்ந்த தொழில் படிப்புகள் அல்லது அதற்கு இணையான படிப்புகள் அல்லது மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE) அல்லது மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் (ECE) ஆகிய பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
இளங்கலை - காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்), இளங்கலை - காட்சிக்கலை (படத்தொகுப்பு) மற்றும் இளங்கலை - காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) போன்ற பட்டப் படிப்புகளுக்கு மேல்நிலை (10+2) கல்வியில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் தகவல்களுக்கு, விண்ணப்பத்துடன் வழங்கப்படும் தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப்படிவத்துடன் தகவல் தொகுப்பேட்டை தபால் வாயிலாக பெற விரும்புவோர், 'Principal, Tamil Nadu Government M.G.R. Film and Television Institute, Tharamani, Chennai - 600113' என்னும் பெயரில் ரூ.200-க்கான வங்கி வரைவோலையையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும்) சாதிச் சான்றிதழின் நகலுடன் ரூ.60க்கான வங்கி வரைவோலையையும்,
ஏதேனும் ஒரு வங்கியில் சென்னையில் மாற்றத் தக்க வகையில் எடுத்து சென்னையில் வசிப்பவர் எனில் ரூ.30க்கான அஞ்சல் வில்லையினை ஒட்டியும், வெளியூரில் வசிப்பவர்கள் எனில் ரூ. 47-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்டும், வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள் எனில் ரூ.71-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட (30 cm x 25 cm) சுய விலாசமிட்ட உறையுடன் The Principal, Tamil Nadu Government M.G.R. Film and Television Institute, Tharamani,Chennai-600 113 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in, www.dipr.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வங்கி வரைவோலையுடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
- தமிழ்நாட்டைச்சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச்சார்ந்தவர்கள் - ரூ.60 (சாதி சான்றிதழின் நகல் இணைக்கப்பட வேண்டும்)
- பிற வகுப்பைச் சார்ந்தவர்கள் ரூ.200
விண்ணப்பங்களை அளிக்க நேரில் வர வேண்டாம். தகவல் தொகுப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் அஞ்சல் மூலம், “முதல்வர் (பொறுப்பு), தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிலையம், சி. ஐ. டி. வளாகம், தரமணி, சென்னை - 600 113” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மேலும், 24.06.2022-க்கு முன்னர் பெறப்பட்ட வங்கி வரைவோலைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 24.06.2022 முதல் 22.07.2022 வரை விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 27.07.2022 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 11ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பம்