ETV Bharat / state

நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ரவுடிகள் 'எஸ்கேப்': கர்நாடகாவில் சுற்றிவளைத்த தமிழ் போலீஸார்! - நிபந்தனை ஜாமீனில் வந்த ரவுடிகள் தலைமறைவு

வழக்கறிஞர் கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ரவுடிகள் இருவர் தலைமறைவான நிலையில், இருவரையும் பெங்களூருவில் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்தனர்.

Rowdy arrest
ரவுடிகள் கைது
author img

By

Published : May 8, 2023, 5:36 PM IST

சென்னை: வடசென்னையில் பிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சிடி மணி, புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த யுவராஜ் (எ) எலி யுவராஜ் (36), ஈசா (எ) ஈஸ்வரன் (32), காக்கா தோப்பு பாலாஜி, கல்வெட்டு ரவி ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில் ரவுடி ஈஷா என்கிற ஈஸ்வரன் மீது திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, ஆர்.கே நகர், சாஸ்திரி நகர் காவல் நிலையங்களில் ஆட்கடத்தல், கொலை, கொலை முயற்சி, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதேபோல் ரவுடி யுவராஜ் மீது காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, சூனாம்பேடு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு திருப்போரூரில் வழக்கறிஞர் காமேஷை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த வழக்கில் ரவுடிகள் ஈஸ்வரன் மற்றும் யுவராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இருவரும், புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். இதற்கிடையே இருவரும் திடீரென தலைமறைவாகினர்.

வெளிமாநிலத்துக்குச் சென்ற இருவரும் சென்னையில் தங்கள் கூட்டாளிகள் மூலம் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் அங்கிருந்தே சில கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதும் அம்பலமானது. இதையடுத்து இருவரையும் பிடிக்க வடசென்னை இணை கமிஷனர் ரம்யா பாரதி தலைமையில் உதவி ஆய்வாளர் விஜய் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தியதில், ஈஸ்வரன், யுவராஜ் ஆகியோர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் (மே 6) பெங்களூரு விரைந்து சென்று, இருவரையும் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்தனர்.

பின்னர் சென்னை அழைத்து வரப்பட்ட அவர்கள், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இருவரிடம் இருந்து 1,390 கிராம் மெத்தா குலோயின் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே, காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் இருவரும் வழுக்கி விழுந்ததால், எலும்பு முறிவு ஏற்பட்டு காலில் கட்டு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "ஆன்மிகத்தோடு கூடிய தமிழே.. தமிழகத்திற்கு வளர்ச்சியைத் தரும்" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

இதையும் படிங்க: கைதிகள் பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது பாயும் அடுத்தடுத்த வழக்குகள்!

இதையும் படிங்க: போதை தலைக்கேறி மெரினா சாலையில் தூங்கிய பெண்.. பசியில் அழுத 2 குழந்தைகளை மீட்ட பொதுமக்கள்!

இதையும் படிங்க: பழனி கோயிலில் கால் இடறி தடுமாறிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.