சென்னை தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு சொந்தமாக சென்னை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடத்தில் மூன்று கடைகள் இயங்கிவருகின்றன.
திருவொற்றியூர் நெடுஞ்சாலை முழுவதும் மெட்ரோ அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று திடீரென்று மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில் மணல் சரிந்து கட்டடத்தின் மேல் விழுந்ததில் இந்த கட்டடத்தில் பேக்கரி கடை நடத்தி வரக்கூடிய சுனில் குமார்(36) என்பவரின் கடை இடிந்து விழுந்து சேதமடைந்தது.
இந்த விபத்தில் பேக்கரியில் உள்ள சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பொருட்கள் சேதமடைந்தது. மேலும் இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:காப்பர் கம்பியில் காற்றாடி விட்ட வடமாநில இளைஞர் உயிரிழந்த சோகம்!